முதுகலை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர் தேர்வு; அறிவிப்பு எப்போது வெளியாகும்?- காலதாமதத்தால் தேர்வர்கள் ஏமாற்றம் - kalviseithi

Apr 13, 2021

முதுகலை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர் தேர்வு; அறிவிப்பு எப்போது வெளியாகும்?- காலதாமதத்தால் தேர்வர்கள் ஏமாற்றம்

 

முதுகலை பட்டதாரி ஆசிரியர்மற்றும் சிறப்பு ஆசிரியர் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு  வாரியம் கிடப்பில் போட்டுள்ளதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,098 முதுகலை பட்டதாரிஆசிரியர் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்.1-ம் தேதி வெளியிட்டது. அதற்கான இணையவழி போட்டித் தேர்வு ஜுன் 26, 27-ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 1 முதல் 25-ம்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைன் பதிவு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.


அதேபோல், அரசு பள்ளிகளில்1,598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி) நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்.26-ம் தேதிவெளியிட்டிருந்தது. அதற்கானஇணையவழி போட்டித்தேர்வு ஆகஸ்ட் 27-ம் தேதி நடத்தப்படும் என்றும், ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 31 முதல் ஏப்.25 வரை நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால் இதற்கான விண்ணப்பப் பதிவும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும்சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தள்ளிவைக்கப்பட்டது தேர்வர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும், விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கும் என்பது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆன்லைன் பதிவு தொடங்க தாமதமாகி வரும் நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் இணையவழி தேர்வு நடத்தப்படுமா என்ற சந்தேகமும் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

15 comments:

 1. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING
  And TEST SERIES BATCH

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST Series BATCHES

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 2. யா௫ம் கவலைப்படவில்லை

  ReplyDelete
  Replies
  1. நண்பா.நான் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்தேன்..அதனை விட்டு தேர்விற்காக தயாராகி கொண்டு இருக்கிறேன்.. பணமும் இல்லை தேர்வு பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.. மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன்..

   Delete
  2. நண்பா மிக மனவேதனையில் இருக்கிறேன்..

   Delete
  3. கவலை கொள்ள வேண்டாம் நண்பா இது பொறுப்பற்ற அரசு, மக்கள் மேல் அக்கறை இல்லாத அரசு. எல்லாம் சரியாகும். பொறுத்திருங்கள் அழைப்பு வரும்.

   Delete
 3. Krishna PGTRB ENGLISH
  Exclusively for English Aspirants.
  Join our Telegram and Facebook.
  Search Krishna PGTRB English in telegram and join soon.
  Scheduled Test is going on....

  ReplyDelete
 4. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 5. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் ???????

  ReplyDelete
 6. Private staff association must reg..

  ReplyDelete
 7. Part time teacher engalife orunaal vidyum dmk atchi pidikkum enga vaalvu life munerum

  ReplyDelete
 8. Special teacher PET drawing tailoring tamil medium posting podunga sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி