ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணிகள் தொடங்க உத்தரவு. - kalviseithi

Apr 15, 2021

ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணிகள் தொடங்க உத்தரவு.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பிளஸ் 2 தவிர்த்து இதர வகுப்புகளுக்கு வீட்டு பள்ளி திட்டத்தின் கீழ் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.


இதற்கிடையில் நடப்பு கல்வி ஆண்டு இம்மாத இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து , அடுத்த கல்வி ஆண்டுக்கான ( 2021-22 ) மாணவர் | சேர்க்கை பணிகளில் தனியார் பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால் , தமிழக அரசின் அனுமதி இல்லாததால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் , தற்போது அரசு பள்ளிகளும் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணியை தொடங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது : 


கொரோனா பரவ லால் பள்ளிகளை முழுமையாக திறக்க முடியாத சூழல் நிலவுகிறது . எனினும் , சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குதல் உள்ளிட்ட இதர கல்வி சார் வேலைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை விவரம் கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தால் , அவர்களை முறையாக வரவேற்று , உரிய முன் விவரங்களை வாங்கி வைத்து , பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே போல , அரசுப்பள்ளிகளில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து அருகிலும் , சுற்றியுள்ள பகுதிகளிலும் தகவல்களை தெரிவித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும். அரசின் அனுமதி கிடைத்தவுடன் மாணவர் சேர்க்கை பணிகளை எமிஸ் இணையதளம் வழியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த பணிகளின் போது கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப் பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர் .12 comments:

 1. இது முற்றிலும் த‌வ‌றான‌ செய்தி..உண்மை யாதெனில் தின‌மும் அனைத்து ஆசிரிய‌ர்க‌ளும் க‌ட்டாய‌ம் ப‌ணிக்கு சென்று கொண்டிருக்கின்றோம்..

  ReplyDelete
 2. எத்தனை பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு செல்கிறார்கள்.

  ReplyDelete
 3. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த கொரனோ பல வழிகளில் உதவி செய்கிறது. ஏற்கனவே அரசு பள்ளி ஆசிரியர்கள் கற்பிப்பது அனைவரும் அறிந்ததே... இந்த லட்சணத்தில் இந்த கொரோனா வேறு கருமம்...

  ReplyDelete
 4. Thiramai irukaravargal trb test la ezhuthi varatum. Teacher enna padikaamal a varugirraargal. Primary teacher ku neenga solvathu porunthum. Aanal exam ezhuthi vanthavargaluku neenga solvathu porunthaathu

  ReplyDelete
 5. 10th 12th staffs kadumaiya uzhaithu thaan result kodukaraanga. Neenga yaarai solringa? Chumma yaarum iruka vitamaataanga. CEO, DEO yellaam irukaanga.. Avanga visit varuvanga.

  ReplyDelete
 6. அரசியல்வாதிகள் எத்தனை நாட்கள் தங்களின் சொந்த தொகுதிக்கு சென்று மக்களின் குறைகளை நிவர்த்தி செய்கின்றார்கள். அவர்களிடம் சென்று உங்களின் கேள்விகளை கேட்டுப்பாருங்கள் மக்களே.

  ReplyDelete
 7. உனக்கு புத்தி சரியில்லை.

  ReplyDelete
  Replies
  1. முதலில் உன்னுடைய புத்தியை சரியாக வைத்துக்கொள்

   Delete
  2. உன்னுடைய உண்மையான பெயரில் கருத்துகள் சொல்ல தெரியாத நீயெல்லாம் பேசாதே. மரியாதையாக பேசவில்லை என்றால் உனக்கு மரியாதை கிடைக்காது.

   Delete
 8. Pgtrb maths 10 units
  Educational methodology + G.K.
  Tntet paper 1 & 2 psychology+ maths

  Fully free only

  Visit youtube channel
  AKBAR MATHS ACADEMY then subscribe for regular vedios

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி