பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் - kalviseithi

Apr 11, 2021

பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

 

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதன் மீது விரைவில் விசாரணை நடைபெற இருக்கிறது.


தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக *நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் அவர்கள்* முன்னிலையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு தீர்மானத்தின்படி இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


இதுவரை பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை தட்டிச் சென்றனர்.


ஒரு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற்று முதுகலை பட்டதாரி ஆசிரியராக செல்கிறார். அந்த பதவியில் அவர்   ஊதிய உயர்வு மற்றும் ஒரு வருடம் கழித்து தகுதிகாண் பருவம்  பெற்றுக் கொள்கிறார்.


ஆனால், அவர் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உள்ள  சீனியாரிட்டி பெற்றுக் கொண்டு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ஏற்கிறார்.


 இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாமலும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு  கிடைக்காமலும் அவதியுறுகின்றனர்.

 மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.


ஊக்க ஊதிய உயர்வு பெற்றுக்கொண்டு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அதே ஊதியத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக மாறுகின்றனர்.


 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஊதியமும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஊதியமும் ஒன்றே. ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே வகிக்கவேண்டும். ஒருவர் இரண்டு பதவியில் பணியாற்றக் கூடாது என்பது நமது பேரியக்கத்தின் கோரிக்கை.


பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற்று முதுகலை பட்டதாரி ஆசிரியராக சென்றால் அடுத்த பதவி உயர்வு நிலையான மேல்நிலை பள்ளி  தலைமையாசிரியர் பதவி உயர்விற்கே செல்ல வேண்டும்.


ஆனால் ஒரே ஊதியத்தில் இரண்டு பதவிகளை வகிப்பது தவறு என்பதை சுட்டிக்காட்டி நமது பேரியக்கத்தின்  *மாநிலத் தலைவர் எஸ். பக்தவத்சலம் தலைமையில் 21 பட்டதாரி ஆசிரியர்கள்* சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 


விரைவில் இந்த வழக்கு நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


(வழக்கு WP NO: 8583/ 30.3.2021.)


சாமி

மாநில சட்ட செயலாளர்.

4 comments:

  1. பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் இதை கடுமையாக நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்காடுவோம்

    ReplyDelete
  2. பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவது subject வாரியாக நடைபெறும்.ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தவர்கள் முதுகலை ஆசிரியராக 5முதல் 17ஆண்டுகளுக்கு இடையில் பதவி உயர்வு கிடைக்கும் 10 ஆண்டு முன் பதவி உயர்வு பெற்றுSELECTION Grade வாங்காமல் குறைவாக சம்பளம் வாங்குகிறார்கள் பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக சம்பளம் வாங்கும் நிலை உள்ளது இந்த வழக்கு நீதிமன்றத்தில் தோற்று போகும் இது பட்டதாரி ஆசிரியர்களை ஏமாற்றம் வேலை

    ReplyDelete
  3. Sir.your case against to graduate teacher

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி