பள்ளிகளில் கொரோனா கண்காணிக்க சிறப்பு குழு - kalviseithi

Apr 14, 2021

பள்ளிகளில் கொரோனா கண்காணிக்க சிறப்பு குழு

 

பள்ளிகளில் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க, சிறப்பு குழு மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ளது.


கொரோனா ஊரடங்கிலும், பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடர்கின்றன. இதற்காக, அரசு தரப்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.பெரும்பாலான மாவட்டங்களில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு நோய்த்தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. 


நாளை மறுநாள் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு துவங்க உள்ளதால் பள்ளிகளில் தடுப்பு பணிகள் முறையாக கையாளப்படுவதை உறுதிசெய்ய, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது.


இதில், தமிழ்நாடு பாடநுால் கழக நிர்வாக இயக்குனர் ஜெயந்தி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ், ஒருங்கிணைந்த பள்ளி இயக்குனர் லதா மற்றும் கூடுதல் இயக்குனர் அமிர்தஜோதி ஆகியோர் தலைமையில், இணை இயக்குனர்கள் அடங்கிய குழு நியமிக்கப் பட்டுஉள்ளது.இந்த குழுவினர், பள்ளி வாரியாக களஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயார் செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி