வரும் கல்வி ஆண்டுக்கான அரசுப்பள்ளி தரம் உயர்வு பட்டியல் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு. - kalviseithi

Apr 12, 2021

வரும் கல்வி ஆண்டுக்கான அரசுப்பள்ளி தரம் உயர்வு பட்டியல் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.


பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது : 


ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வியின் ஆண்டு வரைவுத் திட்டத்துக்காக ( 2021-22 ) , தரம் உயர்த்த வேண்டிய அரசுப் பள்ளிகளின் பட்டியல் தேவைப்படுகிறது. எனவே , தர உயர்வுக்குத் தகுதியான நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலைத் தயாரித்து , இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும். 


மேலும் , தேர்வான பள்ளிகளில் , நிர்ணயிக்கப்பட்ட நிலப் பரப்பு உள்ளிட்ட தகுதிகளைப் பரிசீலித்து , கருத்துரு அடங்கிய அறிக்கையையும் காலதாமதமின்றி அனுப்பிவைக்க வேண்டும் . இதில் , எவ்விதப் புகார்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி