தேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2021

தேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்

 

வாக்குச்சாவடியில் பார்வையற்ற மூதாட்டியின் வாக்கினை சொன்ன சின்னத்தில் பதிவு செய்யாமல் மாற்று சின்னத்தில் பதிவு செய்த தேர்தல் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார்.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராங்கியம் கிராமத்தில் உள்ள அரசமரம் வாக்குச்சாவடியில் 85 வயது பார்வையற்ற மூதாட்டி வாக்கு செலுத்த வந்தார். அங்கு வந்த அவர் தேர்தல் பணியில் இருந்த பெண் அதிகாரி அக்சரா பானுவிடம் வாக்களிக்க உதவுமாறு கூறியுள்ளார். ஆனால் அதிகாரி மூதாட்டி சொன்ன சின்னத்தில் வாக்களிக்காமல் மாற்று சின்னத்தில் வாக்கை பதிவு செய்ததாக மூதாட்டியுடன் வந்தவர்கள் புகார் அளித்தனர்.


அத்துடன், பெண் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காப்படாததை கண்டித்தும், அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்றும் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருமயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியை தேர்தல் பணியில் இருந்து பணி நீக்கம் செய்தார். இதனையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். பின்னர் அந்த இடத்தில் மாற்று அதிகாரி நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.


இந்த போராட்டத்தால் வாக்குப்பதிவு இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

8 comments:

  1. அறிவற்ற அதிகாரிகள். பார்வை அற்ற மூதாட்டி எப்படி வாக்கு சாவடிக்கு வரமுடியும்?.அப்படி வந்தாலும் அதிகாரிகள் எப்படி உதவமுடியும் ?.அப்படி உதவி செய்தால் பார்வை அற்ற மூதாட்டிக்கு வேறு சின்னத்தில் வாக்களித்தது எப்படி தெரியும்?. இது வேண்டும் என்றே தேர்தல் அலுவலர் மீது கூறப்படும் தவறான கருத்து. ஆகவே தயவுசெய்து இதுபோன்ற கருத்தை வெளியிட வேண்டாம்.

    ReplyDelete
  2. திட்ட‌மிட்ட‌ ப‌ழிவாங்க‌ல்...பாதிக்க‌ப்பட்ட‌ ஆசிரியைக்கு என் ம‌ன‌மார்ந்த‌ ஆறுத‌ல்..

    ReplyDelete
  3. ஆசிரியைக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ அநியாய‌ம்

    ReplyDelete
  4. தெரியாம‌ல் தான் கேட்கின்றேன்..த‌மிழ‌க‌ பெண் உய‌ர் போலிஸ் அதிகாரியை பாலியல்ரீதியாக‌ துன்ப‌றுத்திய‌ டிஜிபி யின் பெய‌ர் இதுவ‌ரை செய்திகளில் குறிப்பிடுவ‌தில்லை...ஆனால் அர‌சிய‌ல்ரீதியாக‌ அநியாய‌மாக‌ ப‌ழிவாங்க‌ப்ப‌ட்ட‌,
    பாதிப்பிற்குள்ளான‌ அப்பாவி ஆசிரியையின் பெய‌ரை வெளியிடுவ‌து ஏன்?...இது நியாய‌மா?..ஊருக்கு இளைத்த‌வ‌ர் ஆசிரியரா?..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி