ஆசிரியர்கள் விடுமுறை கேட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா தடுப்பு பணி - kalviseithi

Apr 27, 2021

ஆசிரியர்கள் விடுமுறை கேட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா தடுப்பு பணி

 

பள்ளி பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுமுறை கேட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது.


இதற்கான முதல் உத்தரவை, துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மற்ற வகுப்புகளுக்கு, 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால், தங்களுக்கு விடுமுறை அளிக்கும்படி, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட உள்ளதாக, இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.


இதுபற்றி, தமிழக தலைமை செயலர், சுகாதார செயலர், பள்ளி கல்வி செயலர் ஆகியோர் ஆலோசனை நடத்தி, பள்ளி பணியில்லாமல் விடுமுறை கேட்கும் ஆசிரியர்களுக்கு, கொரோனா தடுப்பு பணி வழங்க அனுமதித்தனர். இதன்படி, முதல் கட்டமாக, துாத்துக்குடி மாவட்டத்தில், 24 ஆசிரியர்களுக்கு கொரானா தடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. அந்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவில், '24 ஆசிரியர்கள், துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா தடுப்புக்கான, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில், தினமும் ஆறு மணி நேரம் பணியாற்ற வேண்டும்' என, கூறியுள்ளார். இதேபோல, மற்ற மாவட்டங்களிலும், பல்வேறு வகையான கொரோனா தடுப்பு பணிகளில், ஆசிரியர்களை பணியமர்த்த, நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.விரைவில், அதற்கான உத்தரவுகள், மாவட்ட கலெக்டர்களால் பிறப்பிக்கப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.-


30க்குள் தடுப்பூசி போட 'கெடு'பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும், 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 30ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி கட்டாயம்போட்டுக் கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம், 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'இ - மெயில்' வழியே அனுப்பியுள்ளது.இதற்கிடையில், அனைத்து துறை செயலர்களுக்கும், கலெக்டர்களுக்கும் தலைமை செயலர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'அரசு ஊழியர்களில் தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் விபரங்களை வரும், 30க்குள் அனுப்ப வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
18 comments:

 1. Adhikari.arasiyalvathi.aapuseekiram.irukkudooi

  ReplyDelete
 2. Government school teachers ku evlo leave vittalum pothaathu.... Pananthini peyigal.... Odambu noga kudathu sambalamum koraiya kudathu...

  ReplyDelete
 3. Anybody town panchayat department Mutual transfer willing

  ReplyDelete
 4. Already government school teachers leave la thaane irukinga.... Aparam ethukku inimel ungalukku leave? Government money loss aagurathe intha teachers ku salary podarathunala thaan.... School normal ah open aagura varaikum intha government school teachers ku corona duty podanum... Leave vidave kudathu....

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நல்ல மனசு சார். அரசு பள்ளி ஆசிரியர்களை பழிக்கிறீர்களே அவர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள். தொகுதி பக்கமே வராத எம் எல் ஏவுக்கும் 150000 சம்பளம். ஓய்வூதியமும் உண்டு. அவர்களை கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் உண்டா? படித்து போட்டி தேர்வு எழுதி வேலைக்கு வந்திருக்கிறார்கள். இங்கு ஆசிரியர்களை பழிக்கும் அனைவருமே அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் என்பதை மறக்க வேண்டாம். எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் பணி செய்யும் ஆசிரியர்களை அவமதிக்காதீர்கள். மாணவர் களின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமை படாத சமூகம் ஆசிரிய இனம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

   Delete
  2. அடடடடா போதும் போதும்... என்ன ஒரு நடிப்பு....

   Delete
  3. திங்களை நாய் குரைத்தற்று.

   Delete
 5. ஆசிரியர்கள் இன்று வரை பள்ளிக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்

  ReplyDelete
 6. எந்தவொரு தேர்விலும் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெற திராணியற்றவர்களே ஆசிரிய சமுதாயத்தை இழிவாக பேசி வருகின்றனர்....

  ReplyDelete
 7. ஆண்டவன் அவரவர்களை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைத்திருக்கிறார்....

  ReplyDelete
 8. கடவுளையே வரம் கொடுக்கும் machine ஆக தானே பார்க்கிறோம்....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி