ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணி ? - தினமலர் செய்தி - kalviseithi

Apr 24, 2021

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணி ? - தினமலர் செய்தி

 


பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணி வழங்க, பள்ளிக்கல்வி துறை ஆலோசித்து வருகிறது.


தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. இதையடுத்து, மாணவ - மாணவியருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இனி தேர்வு நாளில் வந்தால்போதும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.


ஏற்கனவே, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு மேல் விடுப்பு அறிவிக்கப் பட்டாலும், வழக்கமான மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அவர்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு தொடர்பான, அரசின் திட்ட பணிகள் வழங்கலாமா என்பது குறித்து, நிதித்துறையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.இது குறித்து, சுகாதார துறையுடன் பேசி, விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

11 comments:

 1. தினமலர் மாதிரி செய்திதாள்களை தடை செய்யலாமா என அரசு ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னிங்க சார் 👏👏👏

   Delete
 2. த‌ய‌வு செய்து அர‌சு அலுவ‌ல‌க‌ங்க‌ளில் காலியாக‌ உள்ள‌ ப‌ணியிட‌ங்க‌ளுக்கு விருப்ப‌முள்ள‌ ஆசிரிய‌ர்க‌ளை உட‌னே ப‌ணிய‌ம‌ர்த்த‌வும்...சில‌ த‌ர‌ங்கெட்ட‌,ம‌னிதாபிமான‌ம‌ற்ற ம‌னிதர்களின் இழிசொற்க‌ளிலிருந்து நாங்க‌ள் த‌ப்பிப்போம்..

  ReplyDelete
 3. உடனே அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாற்று பணி வழங்குங்கள்.... பள்ளியில் சும்மா பொழுதை கழிப்பது கடுப்பாக உள்ளது... முதலில் seniority la வந்தவர்களுக்கு மாற்று பணி வழங்குங்கள்... அவர்கள் தொல்லை பள்ளியில் தாங்க முடியவில்லை...

  ReplyDelete
 4. 2012 தகுதித் தேர்வு மூலம் பணீ நியமனம் பெற்ற அதிமேதாவிகளுக்கு double சம்பளம் கொடுக்கலாமா. வாழ்க ஊழல் trb

  ReplyDelete
 5. கொரோனாவால் பள்ளிக் கூடத்தையே இடித்து நிரவப்போறாங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி