கற்போம் எழுதுவோம் இயக்கம் - கல்வி சார் பாடங்கள் இனி கல்வித் தொலைக்காட்சியில்.... - kalviseithi

Apr 26, 2021

கற்போம் எழுதுவோம் இயக்கம் - கல்வி சார் பாடங்கள் இனி கல்வித் தொலைக்காட்சியில்....

 


தமிழகத்தில், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத 3,10,000 சுல்லாதோருக்கு நடப்பு 2020-21 ஆள் ஆண்டிற்குள் அப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையின், கற்போம் எழுதவோம் இயக்கம் (Padhna Likhna Abhiyan) மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தன்போது பார்வை-3ல் காணும் குத்திய அரசின் ஆருத்தின்படி இந்திட்டம். ஜூலை-2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

 

இத்திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்கிடும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் 15,823 கற்போர் எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் தன்னார்வய ஆசிரியர்களின் உதவியுடன், கற்போருக்கான பயிற்சிக் கட்டகத்தைக் கொண்டு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் தொடந்து மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது, அடிப்படை எழுத்தறியுக் கல்வியை தொடர்ந்து வகையிலும், இக்கர்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகளை மேலும் மெருகூட்டும் வகையிலும், கற்போர் பயிற்சிக் கட்டசத்திலுள்ள தமிழ் மற்றும் கணித பாடக்கருத்துக்கள் ஒலி மற்றும் ஒளி வடிவில் இவ்வியக்ககத்தினால் தாயரிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, கற்போம் எழுதுவோம். இயக்கத்தின் கீழ் பயின்று வரும் கற்போர்கள் தொடர்ந்து பயன் பெறும் வகையில், முன் குறிப்பிடப்பட்டுள்ளபடி தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படை எழுத்தறிவுக் கல்வி சார்ந்த பாடங்கள், 26.04.2021 அன்று முதல் கல்வித் தொலைக்காட்சியில் மாலை 7.00 மணி முதல் 7.30 மணி வரை தினந்தோறும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி