Flash News : மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை - kalviseithi

Apr 28, 2021

Flash News : மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

 

மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை :
* 2020-21 ஆம் கல்வி ஆண்டில் கோவிட் - 19 பெருந்தொற்று பரவலின் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணாக்கர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழல் நாளது வரை ஏற்படவில்லை. 


* 9 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் துவக்கப்பட்டு கோவிட் -19 நோய் தொற்று அதிகரித்ததால் , 22.03.2021 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு செய்முறைத் தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் , 05.05.2021 அன்று தொடங்க இருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கோவிட் -19 நோய் தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வர வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை. 


* எனினும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை அவர்களை பொதுத் தேர்வுக்கு தொடர்ந்து தயார் செய்தல் வேண்டும்.


மேலும் , ஏனைய வகுப்பு மாணவர்கள் கற்றல் இடைவெளியின்றி பயில்வதை உறுதி செய்யும் பொருட்டு Bridge Course Material மற்றும் Work book வழங்கப்பட்டு , இது தொடர்பான நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில் , அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வருகின்ற 01.05.2021 முதல் பள்ளிகளுக்கு வர தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.


* எனினும் , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை அவர்களுக்கான வழிக்காட்டுதல்களை ( Guidance ) ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து வழங்கவும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு Bridge Course Material மற்றும் Work book இல் உள்ள பாடங்களை கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும் , பயிற்சிகளை மேற்கொள்ளவும் , வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் தொடர்ந்து வழிக்காட்டுதல்களை வழங்கவும் , இதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் உள்ள அலைபேசி , வாட்ஸ் அப் அல்லது பிற டிஜிட்டல் வழிகள் மாற்று வழிகள் ( Digital / Alternate Modes ) பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


* மாணவர்கள் மேற்காண் வழிகளில் அனுப்பும் பயிற்சிகளுக்கான விடைத்தாட்களை சரிபார்த்து தேவையான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் . 

* அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளிகளை தயார் செய்யும் பொருட்டும் , அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் பொருட்டும் , மாணவர்களுக்கான மேற்கண்ட பயிற்சிகளை ஆய்வு செய்து அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் 2021 மே மாத கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் , இதற்கான அறிவிப்பு தனியே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


* மேற்காண் வழிகாட்டுதல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் .

11 comments:

 1. They don't go to school for one year. .
  Don't worry...
  They will not go even if you ask them to go....

  ReplyDelete
 2. இந்த அலுவலகப் பணியாளர்கள்னு சில ஜீவ ராசிங்களும் இங்க வாழுது அய்யா...

  ReplyDelete
 3. private school teachers show your strength to your management not to govt employees.

  ReplyDelete
  Replies
  1. It is not a correct prospective you know. We show our protest not our inner thoughts. Hope to understand.

   Delete
 4. In recent day covid can spread high but the government can open school but now the teachers have leave but not student

  ReplyDelete
 5. ஒரு கோடி மாத ஊதியம் வாஙகுறாங்கப்பு

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி