Flash News : தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் அறிவிப்பு - ஏப்பரல் 10 முதல் அமல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2021

Flash News : தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் அறிவிப்பு - ஏப்பரல் 10 முதல் அமல்!

 


தமிழகத்தில் கொரோனா பரவலை அதிகரித்து வருவதை முன்னிட்டு கோயில் திருவிழா, பேருந்துகளில் நின்று பயணிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்;

Corona Controls TN Press News 8.4.21 - Download here

* கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு

* கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வியாபார கடைகள் வரும் 10ம் தேதி முதல் செயல்பட தடை..!

* பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு

* தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

* திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு

* தேனீர் கடை மற்றும் உணவகங்களில் 50% பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு

* தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி...!

* வணிக வளாகங்கள் 50% விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி

* மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்தும் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிக்கலாம் அமர்ந்து பயணிக்க அனுமதி. பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி