ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 05.05.2021 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2021

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 05.05.2021


பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 05.05.2021 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 10.05.2021 அன்று மாலைக்குள் சி 3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் ( c3sec.indsc@nic.in ) முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலொன்றினையும் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் , காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி ( Surplus Post Without Person ) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள ( Addl . Need Post ) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


 மேலும் , தற்போது அனுப்பப்படும் காலிப்பணியிட விவரங்கள் நாளது தேதியில் அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் ( Eligible vacancy ) தானா என்பதை உறுதி செய்த பின்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


Dir Proceedings - Download here...


32 comments:

  1. Search AKBAR MATHS ACADEMY IN YOUTUBE

    FOR PGTRB ALL MAJOR SUBJECT STUDY MATERIAL FREE

    NO FEE

    PGTRB MATHS 10 UNITS VEDIO DAILY UPLOAD

    ReplyDelete
  2. டெட் பாஸ் செய்தவர்களுக்கு ஒரு வழி செய்யுங்கள் ஸ்டாலின் ஐயா

    ReplyDelete
  3. Replies
    1. நீங்களா ஒரு தேதி கொடுக்காதீங்கயா...
      டாக்டர் டெலிவரிக்கு தேதி கொடுக்குற pola....

      Delete
    2. Summa solli konjam irukura uyirayum saga adikatheenga pls podum pothu podattum kidaikum pothu kidaikattum

      Delete
    3. Delivery date confirma sollamudiyathe 😛😜😝

      Delete
  4. ஏதோ மேஜிக் நடக்க போகுதோ 😄😄😄

    ReplyDelete
  5. டெட் பாஸ் செய்த அனைவருக்கும் பணி வழங்குங்கள்.. அவர்கள் உழைப்பு மற்றும் கண்ணீர் துளிகள் அர்த்தம் அற்றதாக போய் விடாமல் தலைவரே..ப்ளீஸ் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்🙏🙏🙏

    ReplyDelete
  6. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  7. பல வருஷமா சேகரிச்சிக்கிட்டு இருக்கிறீங்க போல...
    பார்ப்போம்.... இப்பதான் ஆரம்பித்து இருக்கறீங்க....

    ReplyDelete
    Replies
    1. இது வருடா வருடம் நடக்கும் வேலை.... சும்மா அவங்களுக்கு பொழுது போகலனா கேக்கற புள்ளி விவரம்...
      எம்பிளாய்மென்ட் ஆபிஸ் எதுக்கு இருக்கு தெரியுமில்ல... அது இல்லனா அந்த ஆபிஸ் மக்களுக்கு வேலை இல்ல 😄😄😄
      அதே மாதிரி தான் இதுவும்...

      Delete
  8. கலைஞர் ஆட்சியில் 2010ல் சான்றிதழ் சரிப்பார்க்கபட்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை முதலில் நியமிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. 2010 மே மாதத்தில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு ku அடுத்து விடுபட்டார் பட்டியல் என்று November வரை கூப்பிட்டு நிறைய கலப்பு திருமணம் மறறும் land priority என்று குறுக்கு வழில் வந்தவர்களுக்கு பணி நியமனம் குடுத்து முறையா படித்து வந்தவர்களை வயித்துல அடிச்சா சாதனை இந்த திமுக அரசுக்கு வுண்ட

      Delete
    2. அது போல மிக பெரிய துரோகத்தை திமுக அரசு இனி வரும் காலங்களில் ஈடுபட கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 2010 ல பறிபோன வாய்ப்பு இப்போ கேடதால் நன்று..

      Delete
  9. 2019 PGTRB தேர்வில் பின்னடைவு பணியிடங்களில் தவறான இடஒதுக்கீட்டு முறைகளால் பாதிக்கப்பட்ட 99 ஆசிரியர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணிநியமனம் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உச்ச நீதி மன்ற தீர்ப்பே தப்பு தான்.. தமிழ்நாடு அரசு பணி விதி படி BC தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேலை தொடங்கி விட்டது.. உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போடப்படும்..

      Delete
    2. Eppadi negaa wrong nuu soldrigaa send mee particulars judges vidaa athigamaa ungalukuu therium polaaa hmm send mee

      Delete
  10. Pg trb chemistry sir l am affected 2019 first person sir waiting

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வலி புரிகின்றது....
      அனைவரும் இக்கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்...

      Delete
  11. Please add tet 2013 group 8610119544

    ReplyDelete
    Replies
    1. Sir please add my number in TET 2013 group 9715252891

      Delete
    2. வீணா போன குரூப்...

      Delete
  12. ஆசிரியர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
    தயவு செய்து நாடே பார்க்கும் முகநூலில்
    1) CPS ஒழித்து GPF தரப் போகிறார்
    2) பழைய ஓய்வூதிய திட்டம் தரப் போகிறார்
    3) ஊதிய முரண்பாடு களையப் போகிறார்
    இப்படிப்பட்ட பதிவுகளை இட வேண்டாம்..
    இது போன்ற பதிவுகள் முகநூலில் அதிகம் காண முடிகிறது, இத்தகைய பதிவுகளால் தான் இன்றைய இணையதள சமூகம் ஆசிரியர்களுக்கு எதிரானதாக மாறியுள்ளது.
    இன்னும் சிலர் வழக்கமான அகவிலைப்படி வழங்கினால் கூட, நமக்கு அரசு எதோ புதிய சலுகை வழங்கியது போல முகநூலில் வாட்ஸ்அப் குழுவில் பதிவிடுகின்றனர்..
    பொதுமக்களை ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பும் வேலையை செய்தித்தாள்கள் செய்து கொண்டிருக்கின்றன, இந்த நிலையில் ஆசிரியர்களே அந்த வேலையை தன்னை அறியாமல் செய்து வருகின்றனர்.

    ReplyDelete
  13. இங்க நீங்க பேசுறதுலாம் ஸ்டாலின் காதுலயா விழப் போகுது?

    ReplyDelete
  14. ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013,2017,2019 என அனைத்து வருடங்களிலும் வெற்றி பெற்று உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கலந்து தான் பணிநியமனம் செய்யப் போகிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற வருட சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டோ பணிநியமனம் பணிநியமனம் செய்யப் போவதில்லை
    2013,2017,2019 அனைவரையும் கலந்து பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு பணிநியமனம் செய்யப் போகிறார்கள் என்று தெரியவருகிறது
    பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி (ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே)
    தமிழ்
    SC- 02/07/1996
    ST- 19/07/2007
    BC - 13/07/1989
    BCM -22/05/1995
    MBC -08/07/1986
    ENGLISH
    SC- 15/03/2007
    SCA- 30/08/2007
    BC - 11/12/1986
    BCM -12/05/2004
    MBC -24/07/2007
    MATHS
    SC- 27/06/2007
    BC - 14/08/1991
    BCM -23/04/2001
    MBC -13/08/1991
    PHYSICS
    SC- 04/09/2002
    SCA- 09/12/2009
    BC - 17/08/1988
    BCM -30/09/1992
    MBC -25/06/1990
    CHEMISTRY
    BC - 29/08/1988
    BCM -07/09/1992
    MBC -10/06/1991
    HISTORY
    SC- 22/01/1993
    SCA- 03/09/2007
    BC - 24/04/1987
    BCM -07/01/1993
    MBC -29/06/1980
    BOTANY
    SC- 06/05/1996
    BC - 07/04/1987
    BCM -04/05/1993
    MBC -13/08/1991
    ZOOLOGY
    SC- 22/02/2010
    SCA- 19/09/2008
    BC - 11/07/1984
    BCM -01/08/1981
    MBC -18/08/1988
    இந்த சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு இதன் பின்னர் உள்ளவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் VACANCY படி பணிநியமனம் நடைபெறும். இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். இதில் சிறிது மாற்றம் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Inga parunga all is well ipdi oru poiyya sollu kalavaratha erpaduthathinga ok n

      Delete
    2. இப்படி பல list பார்த்தாச்சு.....

      Delete
  15. Muthal thalaimurai pattathari pakka matanga la

    ReplyDelete
  16. Dmk very super government.
    Tamil & teachers ,officers, doctors, nurse,drivers, extra joab garente .welcome cm sir,& all ministers tommorow,mla members .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி