ஜூன் 1 முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் – பல்கலை அறிவிப்பு! - kalviseithi

May 3, 2021

ஜூன் 1 முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் – பல்கலை அறிவிப்பு!

 


கொரோனா பரவல் காரணமாக டெல்லி பல்கலைக்கழக தேர்வுகள் ஜூன் 1 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை அதிகாரபூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை!

டெல்லி பல்கலைக்கழகம் : 

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்குகள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இதனை தொடந்து கல்வி நிறுவனங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாகவும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதாலும் மாநில அரசுகள் தேர்வுகளை ஒத்திவைத்து விடுமுறைகளை அறிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக டெல்லி பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 1,194,946 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 16,967 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதனை கருத்திற்கொண்டு டெல்லி பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு மே 15க்கு பின் தேதி நடைபெறவிருந்த நிலையில் தொற்று பரவல் அதிகரித்த காரணத்தினால் தேர்வை ஒத்திவைத்து ஜூன் 1 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ள தேர்வுகளில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுதலாம் எனவும், திருத்தப்பட்ட தேர்விற்கான கால அட்டவணை டெல்லி பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி