கரோனாவால் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: முதல்வர் கேஜ்ரிவால் வழங்கினார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2021

கரோனாவால் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: முதல்வர் கேஜ்ரிவால் வழங்கினார்


டெல்லியில் கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு பள்ளி ஆசிரியரின் குடும்பத்துக்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ரூ.1 கோடி நிதி வழங்கினார்.



டெல்லியின் நரைனா பகுதியில் உள்ள எம்.சி. அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் நிதின் தன்வார். கடந்த ஆண்டு கரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் பணியில் நிதின் ஈடுபடுத்தப்பட்டார். பின்னர்வேறு சில பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டார். இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்கடந்த டிசம்பர் மாதம் ஆர்எம்எல்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு பெற்றோர், மனைவி, மகள் உள்ளனர்.

இந்நிலையில், டெல்லி அரசு சார்பில் நிதின் தன்வார் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை நிதின் மனைவியிடம் முதல்வர் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் வழங்கினார்.

இதுகுறித்து கேஜ்ரிவால் கூறும் போது, “தன்வார் கடுமையான உழைப்பாளி. அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றினார். இவ ரைப் போன்றவர்களின் உதவியால் கரோனாவுக்கு எதிராக அரசுகடுமையாக போராடி வருகிறது. அவரது இழப்பை ஈடுகட்ட இய லாது. ஆனாலும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு அரசு பள்ளியில் வேலையும் வழங்கப்படும்” என்றார்.

3 comments:

  1. வேறு பணிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால் வழங்கப்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. இரத்தின சுருக்கமாக சிறப்பாக கூறினீர்...
      ஒரு கோடி பொருத்தமானதே...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி