2021-மே மாத ஊதியத்திற்கான மென் நகலை மட்டும் (Soft Copy Only) தற்போது சமர்ப்பித்தால் (Through Online) போதுமானது என மாவட்டக் கருவூலர் அறிவிப்பு! - kalviseithi

May 26, 2021

2021-மே மாத ஊதியத்திற்கான மென் நகலை மட்டும் (Soft Copy Only) தற்போது சமர்ப்பித்தால் (Through Online) போதுமானது என மாவட்டக் கருவூலர் அறிவிப்பு!
முதன்மை செயலர் / ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , சென்னை அவர்களின் கட்செவி செய்தியில் , அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களால் IFHRMS செயலியில் சமர்பிக்கப்படும் மே -2021 மாத ஊதியப் பட்டியல்களை ( HARD COPY ) நேரடியாக கருவூலத்தில் சமர்பிக்க இயலாத நிலையில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் ஊரடங்கு காலம் முடிவுற்ற பின் பட்டியல்களை நேரடியாக கருவூலத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் , பணம் பெற்ற வழங்கும் அலுவலர்கள் பட்டியல்களை மென்பொருள் வாயிலாக கருவூலத்திற்கு அனுப்பிய பிறகு , மென்பொருள் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு கருவூல பணியாளர்கள் அவ்வூதியபட்டியல்களை ஏற்பளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது . அதனைத் தொடர்ந்து , திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் மேற்கண்டவாறு பட்டியல்கள் ஏற்பளிப்பு செய்யபப்டும் பட்சத்தில் , உதவி கருவூல அலுவலர்கள் தங்களுக்குட்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இணைப்பில் கண்டுள்ள அட்டவணையை பூர்த்தி செய்து தொடர்புடைய அலுவலரின் கையொப்பத்துடன் ( Signed and Scanned Copy ) சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு தெரிவித்து , பெறப்படும் விவரங்களை பட்டியல்களுடன் ஒப்பிட்டு பட்டியல்களை ஏற்பளிக்க தொடர்புடைய பிரிவு கணக்கர்கள் / கண்காணிப்பாளர்கள் / கூடுதல் கருவூல அலுவலர் / உதவி கருவூல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி