புதிய முதல்வரின் முதல் 3 கையெழுத்துகள் – தேர்தல் வாக்குறுதிகள் அமல்? - kalviseithi

May 7, 2021

புதிய முதல்வரின் முதல் 3 கையெழுத்துகள் – தேர்தல் வாக்குறுதிகள் அமல்?

 


மு.க.ஸ்டாலின் நாளை முதல்வராக பதவி ஏற்றதும், மூன்று முக்கிய கோப்புகளில் முதல் கையெழுத்து போட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


முதல் கையெழுத்து:

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 இடங்களை கைப்பற்றி அபாரமாக தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளது. நாளை திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக சார்பில் பல வாக்குறுதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.


கவர்னர் மாளிகையில் இன்று முதல்வராக பதவி ஏற்ற பின் முதலமைச்சர் அலுவலகத்துக்கு வந்து முதலில் மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் கோப்புகளில் அவர் கையெழுத்திட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கோப்பாக கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் கையெழுதித்திட உள்ளார். இந்த திட்டம் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 முதல் செயல்படுத்த உள்ள நிலையில், நடைமுறைகள் காரணமாக இதை நாளையே கையெழுத்திட உள்ளார்.


அடுத்ததாக தமிழகம் முழுவதும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்துவதுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கும் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி