அரசு பணிகளில் நியமிக்கப்படும் நிரந்தர ஊழியர்களின் விகிதம் 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்திருக்கிறது. இதுகுறித்து என்.பி.எஸ். எனப்படும் நேஷனல் பென்ஷன் சிஸ்டம் அமைப்பு அளித்துள்ள தரவுகளில், மத்திய அரசு பணிகளில் 2020ம் ஆண்டை விட 2021ம் ஆண்டு 27 சதவீதம் அளவிற்கு குறைவாக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்களின் நியமனத்திலும் சரிவு நிலையே நீடிப்பதாக என்.பி.எஸ். தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட மாநில அரசின் நிரந்தர பணிகளில் 21 விழுக்காடு அளவிற்கு குறைவான ஊழியர்களே அமர்த்தப்பட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
2020ம் நிதியாண்டில் மத்திய அரசு பல்வேறு துறைகளில் 1 லட்சத்து 19 ஆயிரம் பேரை நியமித்திருந்தது. ஆனால் 2021ம் நிதியாண்டில் அது 87 ஆயிரத்து 423 ஆக சரிந்திருக்கிறது. மாநில அரசுகளை பொறுத்தவரை 2020ம் நிதியாண்டில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 52 நிரந்தர ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நடப்பு நிதியாண்டில் அந்த எண்ணிக்கை வெறும் 1 லட்சத்து 7 ஆயிரமாக சரிந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸின் 2ம் அலை நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தற்காலிக அரசு பணிகளில் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்படுவதால் நிரந்தர அரசு பணியாளர்களை நியமிப்பதில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி