ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால B.Ed படீப்பு தற்காலிக நிறுத்தம்! - kalviseithi

May 24, 2021

ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால B.Ed படீப்பு தற்காலிக நிறுத்தம்!

 

ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால B.Ed படீப்பு தற்காலிக நிறுத்தம் - தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு.


பிஎஸ்சி, பிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளை முடித்து, பி.எட். பயிலும் மாணவர்களின் வசதிக்காக பி.ஏ.பி.எட், பிஎஸ்சி.பி.எட் ஆகிய பிரிவுகளில் 4 ஆண்டுகால ஒருங்கிணைந்த படிப்பை 2021-22 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கென தனியாக தேசிய அளவில் நுழைவுத் தேர்வுநடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, தமிழகத்தில் தனியார் பி.எட். கல்லூரிகள் 4 ஆண்டுகால படிப்பை வரும் கல்வியாண்டு முதல் தொடங்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது.


இந்நிலையில், ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பு தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக என்சிடிஇ அறிவித்துள்ளது. பட்டப் படிப்பு முடித்த பிறகு பி.எட். படிப்பை தனியாக படிப்பதால் ஓராண்டு காலம் கூடுதலாக செலவாகும். இதை தவிர்க்கவே, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக என்சிடிஇ தெரிவித்திருந்தது.


இந்நிலையில், 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்புக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வை, தற்போது பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களால் எழுத முடியாது என்று கூறப்படுள்ளது. இந்த ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பு 2022-23 கல்வியாண்டில் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.10 comments:

 1. ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013,2017,2019 என அனைத்து வருடங்களிலும் வெற்றி பெற்று உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கலந்து தான் பணிநியமனம் செய்யப் போகிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற வருட சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டோ பணிநியமனம் பணிநியமனம் செய்யப் போவதில்லை
  2013,2017,2019 அனைவரையும் கலந்து பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு பணிநியமனம் செய்யப் போகிறார்கள் என்று தெரியவருகிறது
  பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி (ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே)
  தமிழ்
  SC- 02/07/1996
  ST- 19/07/2007
  BC - 13/07/1989
  BCM -22/05/1995
  MBC -08/07/1986
  ENGLISH
  SC- 15/03/2007
  SCA- 30/08/2007
  BC - 11/12/1986
  BCM -12/05/2004
  MBC -24/07/2007
  MATHS
  SC- 27/06/2007
  BC - 14/08/1991
  BCM -23/04/2001
  MBC -13/08/1991
  PHYSICS
  SC- 04/09/2002
  SCA- 09/12/2009
  BC - 17/08/1988
  BCM -30/09/1992
  MBC -25/06/1990
  CHEMISTRY
  BC - 29/08/1988
  BCM -07/09/1992
  MBC -10/06/1991
  HISTORY
  SC- 22/01/1993
  SCA- 03/09/2007
  BC - 24/04/1987
  BCM -07/01/1993
  MBC -29/06/1980
  BOTANY
  SC- 06/05/1996
  BC - 07/04/1987
  BCM -04/05/1993
  MBC -13/08/1991
  ZOOLOGY
  SC- 22/02/2010
  SCA- 19/09/2008
  BC - 11/07/1984
  BCM -01/08/1981
  MBC -18/08/1988
  இந்த சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு இதன் பின்னர் உள்ளவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் VACANCY படி பணிநியமனம் நடைபெறும். இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். இதில் சிறிது மாற்றம் இருக்கும்.
  அந்தந்த major subject la tet pass pannavankalukku mattum மேற்கண்ட சீனியாரிட்டிக்கு பின்னர் உள்ளவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் நடைபெறும்

  ReplyDelete
 2. First b.ed employment seniority padi list eduthu tet il pass seithavarkalukku pani niyamanam valankavum

  ReplyDelete
 3. TET 2013ல் அதிக மதிப்பெண் பெற்று வேலை இழந்தவர்கள் 35 வயது மேற்பட்டவர்கள்

  ReplyDelete
  Replies
  1. சார், வயது நிர்ணயமும் இருக்குமா..

   Delete
 4. Tet pass pannavarkalakum 50-/-employment seniority padiyum 50-/- Posting poda vendum.yarukum entha pathipum varathu ellarukum govt teachers velai kidaikum.

  ReplyDelete
 5. Tet1employment senority year therincha sollunga sir

  ReplyDelete
 6. ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்? வாழ்க தமிழ்

  ReplyDelete
 7. அப்படி சொல்லிட்டாங்களா சீனியாரிட்டி படி போட

  ReplyDelete
 8. Tet 1 employment seniority bc 2000,mbc 2004,sc 2004,st 2004,bcm 2004

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி