கரோனாவால் பள்ளியை மறந்த மாணவர்களுக்கு வீடுகளின் சுவர்கள் மூலம் கல்வி போதிக்கும் இளைஞர்கள் - kalviseithi

May 31, 2021

கரோனாவால் பள்ளியை மறந்த மாணவர்களுக்கு வீடுகளின் சுவர்கள் மூலம் கல்வி போதிக்கும் இளைஞர்கள்

 

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளன. இதனால், இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அரசுப் பள்ளி மாணவர்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டும் இணையம், கல்வி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்-அப் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பள்ளியை மறந்துவிட்டனர் என்று பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள மேல்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள்,தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிமாணவர்கள் சுமார் 100 பேருக்கு,தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள்,வார்த்தைகள் உள்ளிட்டவற்றைவீடுகளின் சுவர்களில்எழுதி ஞாபகப்படுத்துகின்றனர்.

அவர்கள் வீதிகள்தோறும் சென்று,வீடுகளின் சுவர்களில் தமிழ் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், வாய்ப்பாடு, ஆங்கிலம் மற்றும் தமிழ் வார்த்தைகள், தலைவர்களின் பொன்மொழிகள், திருக்குறள் உள்ளிட்டவற்றை எழுதி, பள்ளி மாணவர்களுக்கு கல்வியை போதித்து வருகின்றனர்.

மேலும், கரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் சுவர்களில் எழுதி, கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இளைஞர்களின் இந்த செயலை, பெற்றோர், பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி