மாநில அரசின் விதிமுறைகளையும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., செயலர் அனுராக் திரிபாதி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். இணைப்பு அந்தஸ்தை பெறும் போது, விதிகளை பின்பற்றுவதாக கையெழுத்திடும் பள்ளி நிர்வாகிகள், பின்னர், அதில் கூறப்பட்டவற்றை சரியாக கடைப்பிடிக்காமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் இணைப்பு விதிகளை மட்டுமின்றி, மாநில அரசுகள் அமல்படுத்தும் விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு கடைபிடிக்க தவறும் பள்ளிகளின் இணைப்பு அந்தஸ்து, ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு பள்ளியும், தங்களின் இணையதளத்தில் பல்வேறு அடிப்படை தகவல்களை, பெற்றோர் பார்க்கும்படி இடம் பெற செய்ய வேண்டும்.பள்ளியின் இணை ப்பு அந்தஸ்து விபரம், பள்ளிக்கு வழங்கப்பட்ட குறியீட்டு எண், முழு முகவரி, பள்ளி முதல்வரின் பெயர், கல்வித்தகுதி, இ- - மெயில் முகவரி, மொபைல் போன் உள்ளிட்ட தொடர்பு விபரங்கள் இடம் பெற வேண்டும்.
அரசு தரப்பில் பெறப்பட்ட கட்டட, சுகாதார, தீயணைப்பு சான்றிதழ்களின் நகல்கள், அறக்கட்டளையின் பதிவு சான்று, டி.இ.ஓ.,விடம் வழங்கிய சுய உறுதி சான்று, மாணவர்களுக்கான கட்டண விபரம், மூன்றாண்டுகளின் தேர்வு முடிவுகள், ஆண்டு கால அட்டவணையும், இணையதளத்தில் பார்க்கும் வகையில் இடம் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு சலுகை CBSE பள்ளிகளில் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.
ReplyDelete