பள்ளிகளில் கோடை விடுமுறை முடிவு; புதிய கல்வி ஆண்டு நாளை துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2021

பள்ளிகளில் கோடை விடுமுறை முடிவு; புதிய கல்வி ஆண்டு நாளை துவக்கம்

 

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், கோடை விடுமுறை காலம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது.நாடு முழுதும் உள்ள பள்ளிகளில், மத்திய இடைநிலை கல்வி வாரிய மான சி.பி.எஸ்.இ., - இடைநிலை சான்றிதழ் கல்வி அமைப்பான ஐ.சி.எஸ்.இ., ஆகிய பாட திட்டங்களிலும் மற்றும் அந்தந்த மாநில பாட திட்டங்களிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாட திட்டங்களில், ஏப்ரல் மாதம் புதிய கல்வி ஆண்டு துவங்கிவிட்டது. மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்படுகின்றன. சுற்றறிக்கைதமிழக பாட திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் தான் கல்வி ஆண்டு துவங்கும்.அதன்படி, இந்த ஆண்டு கொரோனா பிரச்னை இருந்தபோதும், தேர்தலுக்கு முன் பாடங்கள் முடிக்கப்பட்டு விட்டன.  

 

மே 1 முதல் கோடை விடுமுறையை பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்தது. புதிய கல்வி ஆண்டுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, மே மாத இறுதியில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும் என, அப்போது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோடை விடுமுறை காலம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது.கடந்த ஆண்டில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போதும், ஜூன் 1 முதல் ஆன்லைன் வழி பாடங்களை நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி, ஆன்லைன் வகுப்புகள் துவங்கின.புதிய கல்வி ஆண்டு நாளை துவங்கும் நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, புதிய கல்வி ஆண்டு குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எந்த தகவலையும் அனுப்பவில்லை என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

3 comments:

  1. This message made by you, is it correct situation when all affect lockdown circumstances due to a giant infection.

    ReplyDelete
    Replies
    1. Fantastic.. They are eager to collect fees..not worry about students life

      Delete
  2. அவனவன்..ஆக்சிஜன் கிடைக்கும் சாவறான்..நடுவுல நீங்க வேற..உயிரோட இருந்தா பள்ளிக்கூடம்..வாங்க..அப்பேய்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி