திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வாழ்த்து செய்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2021

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வாழ்த்து செய்தி!

 திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் 

மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் மாநிலப் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பாராட்டு



புதுக்கோட்டை,மே.2:திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் 

மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் மாநிலப் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டு காலமாக ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு வகைகளில்  அஇஅதிமுக அரசால்  கடுமையாக பாதிக்கப்பட்டு  வந்தனர்.


மத்திய ஊதியம் வழங்கிட வேண்டும்,புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தினை இரத்து செய்திட வேண்டும், ஏழை,எளிய குழந்தைகளுக்கான தொடக்கப்பள்ளிகளை மூடும் முடிவினைக் கைவிட வேண்டும்,பள்ளிகள் இணைப்புத்திட்டத்தினை கைவிட வேண்டும்,புதியகல்விக்கொள்கையை நிராகரித்திட வேண்டும் என்பன போன்ற பல்வேறு நியாயமான   கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம்

 உள்ளிட்ட அனைத்துவகையான போராட்டங்களையும் தமிழ்நாட்டின் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஒன்றுபட்டு மேற்கொண்டனர்.


ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து  போராடும் காலங்களில் எல்லாம் ,போராடும் ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் இயக்கங்களின் தலைவர்களை அழைத்துப்பேசி,

இணக்கமான முறையில்  கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதற்கு நேர்மாறாக ,

ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களின் மீது கடுமையான தாக்குதல்களையும்,

அடக்குமுறைகளையும் 

தமிழக அரசு ஏவியது.


இத்தகு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட அஇஅதிமுக அரசு, நடைமுறையில் இருந்து வந்த உரிமைகளையும்  ஈவு இரக்கமற்ற வகையில் பறித்துக்கொண்டது.


நடைமுறையில் இருந்து வந்த,அனுபவித்து வந்த  உரிமைகளை  இழந்து தவித்திட்ட  ஆசிரியர்கள் -அரசு ஊழியர்கள், அஇஅதிமுக  அரசின் மிகமோசமான தாக்குதல்களையும் எதிர்கொண்டு வந்தனர்.


ஆசிரியர்-அரசு ஊழியர்களை எதிரிகள் போலவும்,விரோதிகள் போலவும் நடத்தி வந்த அஇஅதிமுக அரசுக்கு

அனைத்து தரப்பு

 மக்களின் ஆதரவோடு தக்க பதிலடி தருவதற்கு காத்திருந்தனர் .

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையும்  பெரிதும் விரும்பினர்.


இத்தகு பெரும் விருப்பம் , பெரும் எதிர்பார்ப்பு தமிழக மக்களின் பேராதரவோடு தற்போது நிறைவேறி இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.


கடந்த 06.04.2021 அன்று நடந்து முடிந்துள்ள 16வது  தமிழக சட்டமன்றப்பொதுத் தேர்தலில் அறுதிபெரும்பாண்மையோடு வெற்றி பெற்றுள்ள திராவிட முன்னேற்றக்கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவைக்கும்,

தமிழக அரசுக்கும் பேரன்பு பெரும் வாழ்த்தும்,பெரும் பாராட்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் மன்றம் தெரிவித்துக்கொள்கிறது .


மேலும் திராவிடமுன்னேற்றக்கழகத்திற்கு மிகப்பெரும் வெற்றியை வாரி வழங்கி தந்து உள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்  

நன்றி பாராட்டுகிறது என தனது செய்திக் குறிப்பில்  குறிப்பிட்டுள்ளார்.

26 comments:

  1. TET pass seithavarkku age seniority padi posting poduga CM MKS sir

    ReplyDelete
  2. Pallandukalamvazhga.congratuations.MKS.sir.Avl.

    ReplyDelete
  3. TET PASS பண்ணுன அனைவருக்கும் பணி வழங்குங்கள்.

    ReplyDelete
  4. Pls TET pass pannavagaluku posting potunga sir

    ReplyDelete
  5. Congratulations M.K.S sir..
    த‌மிழ‌க‌ம் த‌லைநிமிரும் நேர‌மிது..
    ப‌ள்ளிக் கல்வித்துறையில் ப‌ல சாத‌னைக‌ளைப் ப‌டைத்திடும் நேர‌மிது..
    அர‌சூழிய‌ர்,ஆசிரிய‌ர்க‌ளின் பொன்னான‌ நேர‌மிது..

    ReplyDelete
  6. வாழ்க‌ வளமுடன்

    ReplyDelete
  7. வாழ்க‌ வளமுடன்

    ReplyDelete
  8. Congratulations CM stalin sir.

    ReplyDelete
  9. Congrats CM MKS sir. We are waiting for govt. job. Please take immediate action to tet passed candidates for posting sir

    ReplyDelete
  10. Pg trb exam will come or kot

    ReplyDelete
  11. When will get pg trb exam reply

    ReplyDelete
  12. Tet pass panavangaluku job podunga sir

    ReplyDelete
  13. Congrats cm sir,,,ungal saadhanai thamilagathil thodarattum,,,engal ottu veen pogavillai ,,,

    ReplyDelete
  14. Tet pass anavaguluku quick posting podunga pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி