தொழில்நுட்பக் கல்லூரித் தேர்வுகள்; தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன், ஜூலை மாதத்தில் அரியர் தேர்வுகள்: உயர் கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2021

தொழில்நுட்பக் கல்லூரித் தேர்வுகள்; தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன், ஜூலை மாதத்தில் அரியர் தேர்வுகள்: உயர் கல்வித்துறை அறிவிப்பு.

 

பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெறும் அரியர் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வெழுதலாம் என, உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, உயர் கல்வித்துறை இன்று (மே 31) வெளியிட்ட அறிக்கை:


"உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் அறிவுரைப்படி, பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக முதலாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. மேற்படி தேர்வுகள் டிசம்பர் 2020, ஜனவரி 2021 மற்றும் பிப்ரவரி 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டது.

மொத்தம் 2,28,441 மாணவர்களில் 2,09,338 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.63% ஆகும். 18,529 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மேலும், 574 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேற்படி தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெறும் அரியர் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வெழுதலாம். இதற்கான தேர்வுக் கட்டணத்தை 04-06-2021 முதல் 10-06-2021 வரை செலுத்தலாம்.

நடப்புப் பருவங்களான இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் பருவ மாணவர்களுக்கான (அரியர் தேர்வு உட்பட) தேர்வுகள் 14-06-2021 முதல் 14-07-2021 வரை நடைபெறும்.

மாணவர்கள் இதற்கான தேர்வுக் கட்டணத்தை 04-06-2021 முதல் 10-06-2021 வரை செலுத்தலாம்".

இவ்வாறு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி