பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி?: சுகாதாரத்துறை விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2021

பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி?: சுகாதாரத்துறை விளக்கம்

 


கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் அளவு மிகவும் குறைகிறது. இதனால், ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்க பல்ஸ் ஆக்சி மீட்டரை நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தும்  முறை குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:


* 10 நிமிடம் நிதானமாக அமர்ந்த பின் உங்கள் ஆக்சிஜன் (O2) அளவை சரிபாக்கவும்

* கருவியை பயன்படுத்துவதற்கு முன் விரல்களை கிருமி நாசினியால் நன்றாக சுத்தம் செய்யவும்.

* ஆள்காட்டி விரல் அல்லது நடுவிரலில் கருவியை பொருத்தவும்.

* கருவியில் தெரியும் ஆக்சிஜன் அளவும், நாடி துடிப்பும் சீராக தெரியும் வரை காத்திருக்கவும்.

* சில விநாடிகளுக்கு பிறகு ஆக்சிஜன் அளவையும், நாடி துடிப்பையும் குறித்து கொள்ளவும்.

* விரல்களில் மருதாணி, நகபூச்சு, ஈரம் மற்றும் குழுமை ஆக்சிஜன் அளவை தவறாக காட்ட கூடும்.

* ஆக்சிஜன் அளவு 94% கீழ் இருந்தால் மற்ற கையில் உள்ள விரல்களில் பார்க்கவும்.

* தொடர்ந்து 94% கீழ் இருந்தால் மருத்துவ உதவியை நாடவும். மேலும் மருத்துவ உதவிக்கு இலவச சேவை உதவி மையம் 104 அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி