பள்ளிக் கல்வி செயலர் முனைவர். உதயச்சந்திரன் அவர்களை சந்தித்து ஆசிரியர் கூட்டணி முறையீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2021

பள்ளிக் கல்வி செயலர் முனைவர். உதயச்சந்திரன் அவர்களை சந்தித்து ஆசிரியர் கூட்டணி முறையீடு!

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் அ.மாயவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று நமது பேரியக்கத்தின் மாநிலத்தலைவர்     திரு.சு. பக்தவச்சலம் அவர்கள் சென்னை மாவட்ட தலைவர் திரு. சாந்தகுமார் அவர்கள் மாவட்ட செயலாளர் திரு.சீனிவாசன் அவர்கள்  உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு செயலாளர் மதிப்புமிகு.முனைவர் உதயசந்திரன் அவர்களை சந்தித்து நமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.


 கோரிக்கை விபரம் :


1.பள்ளிக்கல்வி ஆணையர்   பணியிடத்தை பரிசீலித்து இயக்குநர் பணியிடத்தை ஒருபோதும் மாற்றம் செய்திடவேண்டாமென்று வேண்டுகிறோம்.


2.புதிய கல்விக் கொள்கையை புறக்கணித்து விட்டு மாநில கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்து வதற்கு ஒரு ஆணையம் அமைக்க வேண்டுகிறோம்


3.மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நிவாரண நிதிக்கு ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை இந்த மாதமே பிடித்தம் செய்திட அரசாணை பிறப்பிக்க வேண்டுகிறோம்.


4 கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பாதிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டும், பணி மாறுதல் பெற்றவர்களுக்கு எந்த பதவி உயர்வும் வழங்கப்பட வில்லை எனவும் அதோடு பணி மாறுதல் செய்யப்பட்டவர்களை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றம் செய்யவில்லை எனவும் கோரிக்கை வைத்தோம்.அதனை ஏற்ற பள்ளிக்கல்வித்துறை செயலர் மதிப்புமிகு. முனைவர். உதயசந்திரன் அவர்கள் உடனடியாக DSC வசம் தொடர்புகொண்டு எத்தனை நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எவ்வளவு பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று விசாரித்தார் ..நமது சார்பாகவும் பாதிக்கப்பட்ட அதாவது இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலையும் காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு* கேட்டுக் கொண்டுள்ளார். உடனடியாக சரி செய்வதாக நம்மிடம் தெரிவித்திருக்கிறார்.


5. 2011க்கு பிறகு பணியில் நியமனம் செய்யப்பட்டு  TET தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை, தகுதிக்காண் பருவம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உட்பட எந்த பலன்களும்  பெறாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு மாண்புமிகு.கழக ஆட்சி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம் . அதையும் விரைவில் செய்து தருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 குறிப்பு :

சஸ்பெண்ட், பணி இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் பட்டியலை மாவட்ட கழகம் சேகரித்து மாநில கழகத்திற்கு காலை பத்து மணிக்குள் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்


தகவல்


திண்டுக்கல் மு.முருகேசன்

மாநில செய்தித் தொடர்புச் செயலாளர் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

13 comments:

  1. ooradangula veetula ukkara matingala.... corona vandha enna pannuvinga

    ReplyDelete
  2. கொரானாவா... இதுங்களுக்கா...

    ReplyDelete
  3. ஐயா உதயச்சந்திரன் அவர்களின் நேர்மையும் தைரியமும் வருகின்ற ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் வெளிப்பட்டு வரலாறு படைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இந்த மன்றம், கூட்டணி, சங்கம், அமைப்பு இதோட லூட்டி எப்ப அடங்கும் ??

    ReplyDelete
  5. Pg trb chemistry 2019 posting podungal list change eppo

    ReplyDelete
    Replies
    1. கோரிக்கையை வலுப்படுத்தவும்...

      Delete
  6. Tet posting பத்தி ஒன்றும் பேசவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. அவங்க ஏன் பேச போறாங்க அவங்களுக்கு தான் ஏற்கனவே வேலையில் இருக்கிறார்களே

      Delete
  7. பகுதி நேர ஆசிரியர் நிரந்திர ஆசிரியர் ஆக்க வேண்டுகிறோம்.இது தேர்தல் அறிக்கையில் முதல்வர் சொல்லி இருந்தார்.நாங்கள் சேர்ந்து இந்த மார்ச் மாதம் முடிந்து (9) வருடங்கள் முடிந்தன.எங்களை பணி நிரந்திரம் செய்து வாழ்வில் (தீபம்) ஏற்றி பிரகாசம் கொடுங்கள்கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி ஐயா.எப்படி உங்கள் பெயரில் உண்மைக்கும்,நேர்மைக்கும்,நியத்திற்கும் அற்புதமான பெயர் வைத்திருக்கிறீர்கள்.அதே போல் பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்விலும் நிரந்திரம் என்ற(பொய்யா) தீபத்தை ஏற்றுங்கள் ஐயா😔😔😔😔🙏🙏🙏🙏

    ReplyDelete
  8. திருட்டு நாய்கள் .. இன்னும் 20 வருசம் ஆகும் இந்த பக்கிரிகள் ரிடையடு ஆக.. அப்புறம் தான் நமக்கு வேலை.

    ReplyDelete
  9. 2012 tet pass.
    posting Poduvangala?

    ReplyDelete
    Replies
    1. Appo enga poneenga boss 2012 la than pass Panna ellarukum posting pottangale

      Delete
  10. திருட்டு நாய்களா? என்ன பேசுகிறோம் என்று புரிந்து பேசவும் உங்கள் திறமைகளை தேர்வுகளில் கா
    ண்பித்து மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று நீங்கள் விரும்பிய இடத்தில் பணி நியமனம் பெறவும் அதை விடுத்து அநாகரிகமாக பேச வேண்டாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி