பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம்... வழங்குமா அரசு? - kalviseithi

May 23, 2021

பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம்... வழங்குமா அரசு?

 

பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை கடந்த 2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா நியமித்தார். ஆனாலும் நியமனம் செய்தது முதலே மே மாதம் சம்பளம் கொடுக்காமல் முந்தைய அ.தி.மு.க அரசால் மறுக்கப்பட்டது. 


எத்தனையோ முறை கோரிக்கை வைத்து இருந்தாலும் 10 ஆண்டுகளும் மே மாதம் மட்டும் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை.


இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க புதிய ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என நம்பிக்கை கொடுத்துள்ளது. 


ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் ஏற்கனவே பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற இதற்காக தனித்துறை ஏற்படுத்தி தனி அதிகாரியை நியமித்துள்ளார் முதல்வர். 


இதிலும் கோரிக்கை மனுக்களை பகுதிநேர ஆசிரியர்கள் கொடுத்து உள்ளார்கள். எனவே கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளார்கள்.


இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியதாவது,


"கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அரசு ஊரடங்கை இப்போது அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் மே மாதம் சம்பளம் கொடுத்து அனைவரின் குடும்பங்களுக்கு உதவிட முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேண்டுகிறோம்.


பெருமனதுடன் முதல்வர் அவர்கள் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு இம்முறை மே மாதம் சம்பளத்தை வழங்கினால், இவர்களின் உணவு, வீட்டு வாடகை குறித்த கவலைகள் குறையும். ஏ


ற்கனவே, மே மாதம் சம்பளம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி நல்ல விடியலை கொடுப்பதாக பள்ளிக்கல்விஅமைச்சர் பேட்டி ஒன்றில் பதில் சொன்னதை ஆவலாக நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம்" என்றார்.

10 comments:

 1. நல்லதே நடக்கும் 👍

  ReplyDelete
 2. கொடுக்கலாம்.....பகுதிநேர ஆசிரியர்களின் மற்ற ஆண்டுகளை விட இந்த கொரோனா காலம் கொடுமையானது

  ReplyDelete
 3. What about Private school teachers salary?? . We also met lots of troubles.

  ReplyDelete
 4. Yes we need salary for may month

  ReplyDelete
 5. #Save private school teachers#

  ReplyDelete
 6. முதல்வர் அவர்கள் பகுதி நேர ஆசிரியர்களை 2/5/2021 முதல் பணி நிரந்தரம் செய்வார் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள் நண்பர்களே

  ReplyDelete
 7. Kandipanga...election ku munnadi sollitaru... part time teacher conform pandranu sollitaru don't worry

  ReplyDelete
 8. ஆசிரியர் கூட்டணிகள் மற்றும் சங்கங்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்,
  கூட்டமைப்புகள் ஒன்று கூடி இந்த இக்கட்டான கொராணா காலத்தில் அரசின் இப்பணியில் நமது பங்காக ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது சம்பளத்தில் குறைந்தது மூன்று நாள் சம்பளத்தொகையினை தமிழக அரசின் நிவாரண நிதிக்கு வழங்க முன்வர வேண்டும்.
  அரசின் இக்கட்டான சூழ்நிலையில் நாமும் உதவுவதும் நம் கடமையாகும். அரசு மேற்கொண்டுள்ள கொராணாவுக்கு எதிரான இப்போரில் துணைநிற்போம். நாமும் வாழ்வோம் மற்றவர்களையும் வாழவைப்போம்.
  ஆசிரியப்பணி அறப்பணி,அர்ப்பணிப்போம்.
  நன்றி.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி