ஊதியமில்லா ஆசிரியர்களுக்கு நிவாரணம் தர கோரிக்கை - kalviseithi

May 19, 2021

ஊதியமில்லா ஆசிரியர்களுக்கு நிவாரணம் தர கோரிக்கை


தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லாததால், அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.


மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தினர் அனுப்பிஉள்ள கடிதம்:


பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்துள்ளது. பலர் மாற்றுப்பணி தேடி அலையும் நிலை உள்ளது. குடும்ப செலவுகளுக்கே தடுமாறுகின்றனர். ஓர் ஆண்டாக ஊதியம் இல்லாமல் தவிக்கின்றனர்.


எனவே, ஊதியம் இன்றி தவிக்கும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, நிவாரண தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், கல்வி தகுதி, அனுபவம் அடிப்படையில், ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகள் தரப்பில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதிய தொகையை, ஆசிரியர்களுக்கு தாமதமின்றி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

16 comments:

 1. உலகத்துல தனியார் பள்ளி ஆசியர்கள் மட்டும் தான் மனுஷன் போல.... நிவாரணம் நிவாரணம் னு கேக்குறீங்க தனியார் கம்பெனி, ரோட்டில் கடை வைத்து இருப்பவர்கள் லாம் மனுஷன் இல்லையா அவங்களாம் உங்களை மாதிரி கேட்டுடா இருக்காங்க பொறுத்து தான் ஆகவேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் அரசு உத்யோகம் பார்ப்பவராக இருப்பீர்கள்.. அதான் கஷ்டம் தெரியல

   Delete
  2. Poda osi sambalam vangittu last one year irukka naye

   Delete
  3. பாவம்டா தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் ஊதியம் வாங்கும் வருடம் 190 ஒரு நாள் வேலை செய்யும் அரசு ஆசிரியர்களை கேட்க துப்பில்லை ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ஊதியம் வாங்கும் தனியார் ஆசிரியரை கேவலப்படுத்த வேண்டாம் பாவம் ஊழியத்துக்காக நெருப்பில் நின்று பண முதலைகளுக்கு வேலை செய்யும் மானம் கெட்ட ஜென்மங்கள் தான் அரசு தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள்

   Delete
  4. What is your designation?

   Delete
 2. Pls recommend for the teachers those who are jobless from past two years

  ReplyDelete
 3. PGTRB MATHS CLASS VIDEOS

  For pgtrb maths exam aspirants

  https://telegram.me/pgtrbmathsgroup
  PGTRB EDUCATIONAL PSYCHOLOGY ALL MAJOR SUBJECT

  https://telegram.me/pgtrbeducationgroup
  TNTET PAPER 1 & 2
  இக்குழுவில் கணிதப் பகுதி government books 6th std to 10 th std வரை உள்ள வினா விடைகள் &

  உளவியல் பகுதி
  Nagarajan , meenatchi sundaram, s.k. mangal புத்தகத்தில் இருந்து upload செய்யப்படும் .,


  https://telegram.me/tntetgroup
  TNPSC MATHS SHORTCUT GROUP LINK


  https://telegram.me/tnpscgroupall
  Copy paste this link in browser

  ReplyDelete
  Replies
  1. Kalvisethi la podara news i apadiye u tube la podariyee unakku vekkama illa...news i collect panni podanum... திருடி போடக்கூடாது...

   Delete
 4. Private school teachers are getting at least 50% salary. but the teachers those who quite their job before two years are only suffering by economically as well as mentally. If the government is giving any job with consolidate salary I am ready to work.

  ReplyDelete
 5. Part time teacher conform pandranu solli irrukinga Aya.. education system la idha kondu vanga plz

  ReplyDelete
 6. ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது

  ReplyDelete
 7. நீங்கள் கல்விச் செயல்பாடுகளை அதன் போக்கில் நடைபெறச் செய்தாலே போதும். தேர்வை ரத்து செய்வது, ஆல் பாஸ் செய்வது போன்ற மடத்தனங்களை அரங்கேற்றாமல் இருந்தாலே போதும்.

  பள்ளிகளை திறக்க முடியவில்லையா ? சரி.. நிலைமை சீரடையும் வரை ஆன் லைன் வகுப்பை முறைப்படுத்தலாமே. நாம் ஒன்றும் கற்காலத்தில் வாழவில்லையே, தற்போது 99% அரசுப் பள்ளி மாணவர்கள் அலைபேசி வைத்திருக்கிறார்கள். மீதமுள்ள 1% மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று பாடம் நடத்த அறிவுறுத்தலாம்.

  பொதுத்தேர்வை பொறுத்த வரையில் அந்தந்த பகுதியில் உள்ள மாணவர்கள் அருகிலுள்ள பள்ளியிலேயே தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடத்த வேண்டும்.

  தேர்வு எழுத வரும் மாணவர்களை தனிமைப்படுத்தி பொது வெளியில் இடைவெளி விட்டு காத்திருக்கச் செய்யலாம்.

  தேர்வு முடிந்த பின்பும் அனைவரையும் கும்பலாக ஆட்டு மந்தைகள் போல அனுப்பாமல் வகுப்பிற்கு ஒரு நிமிடத்திறகு ஒருவரை வெளியே அனுப்பலாம்.

  இதற்கென தேர்வு நடைபெறும் பள்ளிகளில் போதிய காவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தலாம்.

  மூன்று மணிநேரம் நடைபெறும் தேர்வை ஒரு மாணவர் ஒன்றறை மணி நேரத்தில் முடித்து விட்டார் எனில் வெட்டியாக அவரை காத்திருக்க வைக்காமல் பேப்பரை வாங்கி விட்டு அனுப்பி விடலாம்.

  தற்போதுள்ள சூழலில் பள்ளி வளாகம் மட்டுமே சமூக இடைவெளி நன்முறையில் கடைபிடிக்கப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தி தருவதாக இருக்கிறது. ஒரு ரேஷன் கடையை விட , ஒரு மருத்துவமனையை விட, ஒரு கசாப்புக் கடையை விட, ஒரு காய்கறி மார்க்கெட்டை விட, பள்ளி வளாகம் என்பது மிகவும் பாதுகாப்பானது என்கிற எளிய உண்மை கூட இங்குள்ள அமைச்சர்களுக்கு, அரசு அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்பது வேதனையாக உள்ளது.

  அரசாங்கம் இதைச் செய்தாலே போதும். பொதுத்ர்வு தவிர்த்து மற்ற வகுப்புகளுக்கு நிலைமை சீரடைய வில்லை எனில் சும்மா " அல்பாஸ் " என்று அறிவிக்காமல் ஆன்லைன் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம்.

  அரசாங்கம் இதனை முறைமைப்படுத்தினாலே, அது தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு போதுமானது. ஆனால் இதையும் செய்யாமல், எதையும் யோசிக்காமல் ஊடகங்களின் வெற்று சலம்பல்களை கருத்தில் கொண்டு, கல்விச் செயல்பாடுகளை கிடப்பில் போட்டால், அந்தக் கலைமகள் நினைத்தால்கூட கல்விச் சீரழிவிலிருந்து தமிழகத்தை மீட்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. Sir 99% மாணவர்களிடம் எங்க சார் மொபையில் உள்ளது... இல்லை இன்னும் வறுமை கோட்டிற்கு கிழுள்ள மாணவர்கள் குடும்பம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.. எங்கள் பள்ளியில் 50% மாணவர்கள் தான் போன் வைத்துள்ளனர்... அதுவும் மாணவன் கையில் இருக்காது.. அதலால் எங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் பாடத்தை power point LA ready பண்ணி அதற்கு வாய்ஸ் ரெக்கார்டு செய்து தான் அனுப்புகிறோம்..ஏனென்றால் மாணவனின் அப்பா மொபைலை பணி புரியும் இடத்திற்கு உடன் எடுத்து சென்று விடுவார் அவர் மாலையில் வீடு திரும்பும் போது தான் அந்த மாணவன் மொபைல் வாங்கி பாடம் பார்க்க முடியும்..

   Delete
 8. நீங்கள் சொல்வதை போல் அனைத்தையும் செய்ய இயலாது.. ஆன்லைனில் தேர்வு வைத்தால் பார்த்து தான் எழுதுவர்கள்...அதற்கு எதற்கு தேர்வு நான் இக்கருத்தை பொதுவாக சொல்கிறேன்...சார் முதலில் பள்ளியல் நடைபெறும் செயல்பாடுகளை சென்று பாருங்கள் புரியும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவரகளுக்கு பள்ளி திறக்கப் பட்ட பொழுது பேட்ஜ் பிரத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்பிற்கு அதுவும் முக கவசத்துடன் தான் வந்தார்கள் தேர்வுக்கு முன்பு எவ்வளவு நேரம் வெளியே மாணவனை தனிமைபடுத்தி வைக்க இயலும்.. பள்ளி மைதானத்தில் என்ன நிலாவா காய்கிறது....? இன்றும் பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டு தான் உள்ளது... கல்வி செயல்பாடுகளை எந்த பள்ளியும் ,மாணவனும் இன்று வரை நிறுத்தவில்லை.. எட்டாம் வகுப்பு வரை மாணவனின் தேர்ச்சியை நிறுத்தக் கூடாது அந்த முறை எதற்கு தெரியுமா மாணவன் கல்வி பணியில் இடைநிற்றல் இருக்க கூடாது என்பதற்கு தான் அதையும் புரிந்து கொள்ளவும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி