அரசு பள்ளி மாணவியர் வாட்ஸ் ஆப் குழு : கண்காணிக்க அறிவுரை - kalviseithi

May 28, 2021

அரசு பள்ளி மாணவியர் வாட்ஸ் ஆப் குழு : கண்காணிக்க அறிவுரை

 

'அரசு பள்ளி மாணவியருக்கான 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் பெண் ஆசிரியைகளும் இடம் பெற்று, தவறான பதிவுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில், மாணவியருக்கு 'ஆன்லைன்' வழியே பாடம் நடத்திய, வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், பாலியல் ரீதியான கருத்துகளை பகிர்ந்ததாக புகார் எழுந்தது. ஆசிரியர் மொபைல்போனில் பகிர்ந்த கருத்துக்களை, மாணவியர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.இது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து ராஜகோபாலனை கைது செய்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும், குழந்தைகள் நல பாதுகாப்பு கமிஷனும் விசாரித்து வருகிறது.மேலும், ஆன்லைன் வகுப்புகளில் இதுபோன்ற பிரச்னைகள் இல்லாமல் தடுக்க, புதிய வழிமுறைகளை ஏற்படுத்த தனியாக குழு அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.


இதற்கிடையில், அரசு பள்ளி ஆசிரியர்களின் 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் வழியாக பாடம் நடத்தும் போது, இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டு விடாமல் தடுக்க, அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள், அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.


இதன்படி, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவ - மாணவியர் அடங்கிய குழுக்களில் பெண் ஆசிரியைகளும் கட்டாயம் இருக்க வேண்டும். முடிந்தால், பெற்றோர் தரப்பு பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும்.மாணவ - மாணவியருக்கான 'வாட்ஸ் ஆப்' குழுக்களில், ஆசிரியரோ அல்லது மாணவ - மாணவியரோ தேவையற்ற கருத்துகள் மற்றும் ஒழுக்கத்தை கெடுக்கும் தகவல்களை பதிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

2 comments:

  1. Pls consider no coeducation govt school in tamilnadu seperate boys and girls all school intamil nadu boys school fully gents teacher girls school. Fully lady teacher problem solved pls consider tn cm m.k.stalin ayya

    ReplyDelete
    Replies
    1. Super I am also stand with your opinion... Immediately transfer gent staff from girls schools and vice-versa

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி