கோவாக்சின் தடுப்பூசி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது: ஆய்வு முடிவில் தகவல் - kalviseithi

May 16, 2021

கோவாக்சின் தடுப்பூசி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது: ஆய்வு முடிவில் தகவல்

 

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. எனினும் கொரோனா வைரசானது தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படுகிறது.அவ்வகையில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியானது இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் உட்பட பல வகையான உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிராக நன்கு செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருந்தது.இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வு இதழில், கோவாக்சின் தடுப்பூசி மருந்து குறித்த ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது. அதில், கோவாக்சின் தடுப்பூசியானது, இந்தியாவிலும் பிரிட்டனிலும் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட இரட்டை மாறுபாடு கொண்ட பி.1.617 மற்றும் பி.1.1.7 உள்ளிட்ட அனைத்து முக்கிய வளர்ந்து வரும் கொரோனா வகைகளையும் அழிக்கும் என கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. Covidshield தடுப்பூசி போட்டவர்களுக்கு இது உருமாற்றம் அடைந்த கொரானவை வெல்லுமா என்ற ஒரு ஆய்வு கட்டுரை தேவை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி