தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2021

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்!

''தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி:


தமிழகத்தில் கொரோனாவால் 5 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர், கூலி வேலைக்கு செல்வதாக கேள்விப்பட்டு, மனவேதனை அடைந்தேன்.இது குறித்து முதல்வரிடம் பேசியுள்ளேன். தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க, முதல்வர் நல்லதொரு முடிவை எடுப்பார். தமிழகத்தில் நீட் தேர்வை, எந்த நேரத்திலும் அனுமதிக்க மாட்டோம்.சட்டசபை கூடும் நேரத்தில், அதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். எந்தவித அவசரமும் இல்லாமல், மாணவர்களுக்கு அவகாசம் வழங்கிய பின்னரே, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



15 comments:

  1. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. நிதி கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 🌹🌹

    ReplyDelete
    Replies
    1. vaaippu ella raja vaippu ella...nithi koduppatharkku pathilaga seniority posting poda sollunga athu thaan neraya per vaal vatharathai kaakkum ...

      Delete
    2. S, true seniority posting podunga

      Delete
  3. Eppo nalla mudivu edupeerkal ellorum sethu sudukattukku ponaprama

    ReplyDelete
  4. Sir Pls consider jobless teachers also

    ReplyDelete
  5. தமிழகத்தில் 95% தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு EPFபிடித்தம் செய்யவில்லை.பிடித்தம் செய்யும் பள்ளிகள் 24% நிதியை ஆசிரியரின்க சம்ள்பளத்தில் பிடித்தம் செய்கின்றன.பள்ளிகள் செலுத்தவேண்டிய தொழிலாளர் வைப்பு நிதியை செலுத்துவதில்லை..மேலும் இதை பற்றி நிர்வாகத்திடம் கேட்டால் அவர்கள் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வார்கள்..அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல ஆசிரியர்கள் ஒன்றிணைய வேண்டும்.பள்ளித்துறை அமைச்சர் இதன்மீது நடவடிக்கை எடுத்தால் பள்ளியிடம் இருந்து கணிசமான தொகையை ஆசிரியர்கள் பெற முடியும்.

    ReplyDelete
    Replies
    1. இதே நிலைதான் தனியார் கல்லூரிகளிலும். தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என்று அமைச்சர்கள் பிரித்து பார்க்க கூடாது.
      'Anbil' போல் 'Ponmudi' யாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      Delete
  6. About this last one year only Dept as teaching only not going. Please consider.

    ReplyDelete
  7. தனியார் பள்ளிகள் இப்போதும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றனர்.
    பள்ளியின் கட்டுமான வேலை இன்ன பிற வேலைகள் செய்கின்றனர்.ஆனால் ஆசிரயர்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை.
    தனியார் பள்ளிகளின் கொட்டம் அடங்க அவர்களே ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும்.
    அரசு கிடுக்கிபிடி போடவேண்டும்.
    செய்வார்களா,
    அரசு பள்ளி ஆசிரியர்களை விட அனுபவமும், திறமையும் கொண்ட இவர்கள் சென்ற ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டார்கள்.
    தனியார் பள்ளிகளை அரசுடைமை ஆக்க வேண்டும்.
    இது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
    Replies
    1. நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் தலைமை ஆசிரியருமே பள்ளி கட்டண தொகையையயும் RTE 25% -ல் அரசு அளித்த தொகையையும் பங்கிட்டு கொண்டால் பள்ளி நிர்வகிக்க எப்படி பணம் இருக்கும்? நீஙக கூறுவது 100% சரி

      Delete
  8. நீதி கிடைத்ததால் ரொம்ப சந்தோசம்

    ReplyDelete
  9. அட போங்க ப!!! இதை நான் போன மாசமே முதலமைச்சர் தனிப்பயிற்சி வில் பதிவு செய்தேன்.... ஆனால் எந்த பயனும் இல்லை...

    ReplyDelete
  10. அட போங்க ப!!! இதை நான் போன மாசமே முதலமைச்சர் தனிபிரி வில் பதிவு செய்தேன்.... ஆனால் எந்த பயனும் இல்லை..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி