ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2021

ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை


கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆசிரியர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை : 


அரசு , அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துரிதமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரத்தை அதற்குரிய ஆவணங்களுடன் கல்வி மேலாண்மை தகவல் முகமை ( எமிஸ் ) தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் , போடாதவர்கள் எண்ணிக்கையை மாவட்டவாரியாக அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகள் தொகுத்து அதன் விவர அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். அதில் முதல் மற்றும் 2 - ஆவது தவணை தடுப்பூசி விவரங்களை தனியாக குறிப்பிட வேண்டும். இது தொடர்பாக அனைத்து பள் ளித் தலைமை ஆசிரியர்கள் , முதல்வர்களுக்கு உரிய வழிகாட்டு தல்களை வழங்க வேண்டும் . அதனுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும்.




4 comments:

  1. ஏய் அறிவுகெட்ட கல்வித்துறையே தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுக்கு உங்கொப்பனா தருவான்??

    ReplyDelete
  2. 1st seniority la appointment aana teachers ku podunga... Salary mattum 1L vaanguvanga but government podara injection poda maatangaloooo...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி