மகளிர் இலவசமாக நகரப் பேருந்தில் பயணம் செய்ய அரசாணை வெளியீடு. - kalviseithi

May 7, 2021

மகளிர் இலவசமாக நகரப் பேருந்தில் பயணம் செய்ய அரசாணை வெளியீடு.
ஆணை :  GO NO - 19 , Date : 07.05.2021

1. 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான மாண்புமிகு முதலமைச்சரின் தேர்தல் அறிக்கையில் , ' தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் நகரப்பேருந்து ( Towr bus ) ] மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் ' என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.


2. 2011 - ஆம் ஆண்டின் மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கட் தொகையில் பெண்கள் 49.80 சதவீதமாக உள்ளனர் . ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மகளிரின் பங்களிப்பு இன்றியமையாததாகும் . தற்போதைய மாறிவரும் சமூக , பொருளாதார சூழ்நிலையில் மகளிர் உயர்கல்வி பெறுவதற்கும் , குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டு பணிகளுக்குச் செல்வதற்கும் , சுய தொழில் புரிவதற்கும் போக்குவரத்துத் தேவை இன்றியமையாதது ஆகும்.


3. தமிழ்நாட்டில் , பணிபுரியும் ஆண்களின் விகிதத்தை கணக்கில் கொள்ளுப்பாக பணிபுரியும் பெண்களின் விகிதம் பெருமளவு குறைவாகவே உள்ளது . 2011 - ஆம் * மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி , பணிகளில் பெண்களின் பங்களிப்பு Participation Rate ) 31.8 சதவீதமாகவும் ஆண்களின் பங்களிப்பு 59.3 சதபால கணக்கிடப்பட்டுள்ளது . பொருளாதார வளர்ச்சிக்கு மகளிரும் சிறப்பான பங்களிப்பினை இயலும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பணிகளில் மகளிரின் பங்களிப்பு விக்கத் உயர்த்தவேண்டியது அவசியமாகிறது . உயர்கல்வி கற்பதற்காகவும் , பணி பக்கம் பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பாதுகாப்பான பயணங்களை அமைத்துக் கொட்டிய பொதுப் போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும் , மேற்கூறிய சமூகப் பொருளாதா தேவைகளுக்கு உகந்ததாக அமையும்.


 4 . அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நாரப்பேருந்துக வாயிலாக ஆண்டுடொன்றுக்கு சுமார் ரூ .3,000 கோடி அளவிற்கு வருவாய் பட்டப்படுவதாகவும் , all புரியும் மகளிர் / உயர் கல்வி பயிலும் மாணவியர் சுமார் 40 சதவீதம் நகரப்பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதனால் , நகரப் பேருந்துகளில் இலவம ப போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் வழங்குவதன் மூலம் அரசு ரூ .1,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என கருதப்படுகிறது. 


5 மேற்கண்ட சூழ்நிலையில் , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்ட நகரப் பேருந்துகளில் ( white board ) , பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மானாவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும் , பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.


6. மேலும் , இதன் மூலம் ஆண்டொன்றிற்கு , அரசு போக்குவாத்துக் கழகங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள சுமார் ரூ .1,200 கோடி இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு , இழப்புத் தொகையினை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக வழங்கவும் அரசு ஆணையிடுகிறது.


7. இவ்வானை நிதித்துறையின் இசைவுடன் அதன் அ.சா.எண் .21431 / நிதி ( சங y2021 , நாள் , 07.05.2021 - ன்படி வெளியிடப்படுகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி