கொரோனா நோய் தடுப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவறாது பணிக்கு செல்ல அறிவுரை - CEO செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2021

கொரோனா நோய் தடுப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவறாது பணிக்கு செல்ல அறிவுரை - CEO செயல்முறைகள்.

 

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்திரவின்படி , ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் , சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரால் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளும் பொருட்டு , வீடு வீடாக சென்று கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதை அறிய கணக்கெடுப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவறாது மேற்படி பணியினை மறு அறிவிப்பு வரும் வரை கண்காணித்து அறிக்கையினை உரிய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


 இப்பணியினை மேற்கொள்ளாத ஆசிரியர்களின் பெயர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.


 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தமது ஆளுகையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் , மேற்படி கணக்கெடுப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு செல்வதை உறுதி செய்திட வேண்டும்.


 இப்பணியினை கண்காணித்து , கீழ்காணும் படிவத்தில் அறிக்கையினை , தினசரி மதியம் 12 மணிக்குள் , ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு ( ceoerdb4@gmail.com ) அனுப்பி வைக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

8 comments:

 1. நெறய பேருக்கு இப்பதான் தூக்கமே வரும்...

  ReplyDelete
 2. Illa niraya parukku ipdan ueer vandirukkum......

  ReplyDelete
 3. Adankoyyala... Ivvalavu naala osi chambalam

  ReplyDelete
 4. 1st government school teachers ku corona duty podunga pa... Summave salary vangarathu avangala sombery aakkuthu....

  ReplyDelete
  Replies
  1. Itho வந்துட்டானுங்க..mentals . Ha ha ha

   Delete
  2. You didn't pass tet / cit off. :)

   Delete
 5. osi chambalam nu sollite sagunga....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி