NEET EXAM - சட்டப்பேரவை கூடிய பிறகு முடிவு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2021

NEET EXAM - சட்டப்பேரவை கூடிய பிறகு முடிவு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி!

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு  விவகாரத்தில் சட்டப்பேரவை கூடிய பிறகு முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (மே 25) செய்தியாளர்களைச் சந்தித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:

"பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தனியாகக் குழு அமைக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் நீட்  எதிர்ப்பே நமது கொள்கை. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தது போல எப்போதுமே நாம் நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்தான். கண்டிப்பாக நீட் தேர்வை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பேரவை  எப்போது கூடுகிறதோ அப்போது இதுகுறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும்.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளைப் பொறுத்தவரை வழக்கமான தேர்வு முறையே பின்பற்றப்படும். தேர்வு நேரக் குறைப்பு, விரிவான பதில் அளிப்பு ஆகியவை மாற்றப்படாது. இதையேதான் மத்திய அரசுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான பிற மாநிலங்களும் தெரிவித்துள்ளன. எனினும், தேர்வுகளைப் பாதுகாப்புடன் நடத்த வேண்டியது அரசின் பொறுப்பு.

பொதுத் தேர்வை 2 கட்டங்களாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்த பிறகு, இறுதி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்".

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

2 comments:

  1. மாணவர்கள் கல்வியில் விளையாட வேண்டாம் நீட் இருக்கா இல்லையா

    ReplyDelete
    Replies
    1. Nèetai Olikka sattamandrathil sattam kondu Vara vendum.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி