12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துதல் சார்பாக இணையவழி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2021

12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துதல் சார்பாக இணையவழி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மே மாதத்தில் நடத்தப்பட இருந்தது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . மேலும் , தற்போது 07.06.21 - ம் தேதி முடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது . இச்சூழ்நிலையில் மாணவர்களுக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள் , பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கருத்துக்களை இணையவழியாக 03.06.2021 அன்று தொடர்பு கொண்டு கேட்டறிந்து அதன் அறிக்கையினை இவ்இயக்ககத்திற்கு அனுப்பிடத் தக்க வகையில் தயார் நிலையில் வைத்திருக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் தலைமையாசிரியர்கள் மூலமாக அவர்களது பள்ளிகளைச்சார்ந்த மாணவர்கள் , பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் விவரத்தை தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அளித்திட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



1 comment:

  1. கண்டிப்பாக தேர்வு நடத்தப்பட வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி