ஜிப்மரில் ஜூலை 1 முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்: கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் இடைநீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2021

ஜிப்மரில் ஜூலை 1 முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்: கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் இடைநீக்கம்

 புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.

இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:


''புதுவையில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் பயிலும் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள், பிஎஸ்சி நர்சிங் (முதல், இரண்டாம், மூன்றாமாண்டு) மாணவர்கள், பிஎஸ்சி துணை மருத்துவப் படிப்புகள் (முதல், இரண்டாமாண்டு) பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. எம்பிபிஎஸ் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்களுக்குத் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.

கரோனா தடுப்பூசி கட்டாயம்

மாணவர்கள் கரோனா தடுப்பூசியைக் கண்டிப்பாகச் செலுத்திக்கொள்ள வேண்டும். ஜிப்மர் வளாகத்தில் மாணவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை எங்கு செலுத்தியிருந்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசியை ஜிப்மர் வளாகத்தில் செலுத்திக் கொள்ளலாம்.

கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், கரோனா பரிசோதனைக்குப் பிறகே ஜிப்மர் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மற்ற மாணவர்கள் நேரடியாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைகளுக்குச் செல்லலாம்.

வகுப்புகளில் மாணவர்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வகுப்புகளிலிருந்து இடைநீக்கமும் செய்யப்படுவர்''.

இவ்வாறு ஜிப்மர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி