2012 க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அரசு பணிக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பக பதிவுமூப்பு ஆசிரியர்கள் - பணியிட நிரப்புதலில் முன்னுரிமை கோரி வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2021

2012 க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அரசு பணிக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பக பதிவுமூப்பு ஆசிரியர்கள் - பணியிட நிரப்புதலில் முன்னுரிமை கோரி வேண்டுகோள்!

ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதலில் தற்போது TET நடைமுறையில் இருப்பது நாம் அறிந்த ஒன்று. அனால் கடந்த  2010 மார்ச் மாதம் கல்வி மானியக் கோரிக்கையின் போது (சரியாக கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில்) அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட்டார்.


அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் இருந்த ஆசிரியப் பணி நாடுநர்களுக்கு 5:1 என்ற விகிதாச்சார ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி 2010 மே, ஜுலை, நவம்பர், டிசம்பர் & 2011 பிப்ரவரி, 2012 ஜனவரி என பல கட்டங்களில் CV எனப்படும் சான்றுகள் சரிபார்ப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும், மாநில அளவிலும் நடைபெற்றன. பலருக்கு 5:1 விகிதத்தில் பணியும் கிடைத்தது.



பொதுவாக 5:1 என்ற விகிதத்தில் ஒரு பணி நாடுனர் பெயர் வந்தாலே அடுத்தடுத்த CV க்களில் விரைவில் பணி கிடைக்கும் என்ற சூழலில் மீதமுள்ள அப்போதைய 5:1 ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் சுமார் 11000  ஆசிரியக் குடும்பங்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருந்தன. 

ஆனால் அடுத்தடுத்து மத்திய மாநில ஆட்சி மாற்றங்கள் வந்ததால் இந்த வகை வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஆசிரியர்களின் கனவு முற்றிலும் தகர்ந்தது. தற்போது வயதும் பத்து வருடங்கள் கூடியிருக்கும்பட்சத்தில் அரசு பணி என்பது கானல்நீராகி விடுமோ என்ற அச்சத்திலேயே காத்துக் கொண்டு இருந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு  திமுக ஆட்சியமைத்ததால் இந்த வேலைவாய்ப்பக பதிவுமூப்பு வகை  ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் தொடந்து மனுக்கள் அனுப்பியும் வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம், விரைவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து இந்த கோரிக்கையை இனிவரும் சட்டமன்ற மானியக் கோரிக்கைகளில் சேர்த்து கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு ஆசிரியர் பணிக்காக காத்துள்ள  இடைநிலை மற்றும்  பட்டதாரி  ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு இல்லாமல் முன்னுரிமை தரவும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயாவின் கரங்களில் பெற்றிருக்க வேண்டிய பணியாணை தற்போது அவரது தவப்புதல்வர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க .ஸ்டாலின் கரங்களில் பெற காத்துள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தர ஆவண செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்வதாக  அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்  திரு.சின்னராசு அவர்கள் இன்று  (24/06/2021) தஞ்சையில் தெரிவித்துள்ளார்.

23 comments:

  1. Tet தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அல்வா.

    ReplyDelete
  2. Ithu ennaba puthu Katha....mmmmm..poi paarunga...yaarukku...Emma format la job allot pannuvangalo...

    ReplyDelete
  3. எல்லா சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அந்த விகித சாரத்தில் தான் அழைக்கப்படும். அதற்காக TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டாம் என யாரும் கூறவில்லை பதவி மூப்பில் இருப்பவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் நடத்த பட்ட ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கலாம் அல்லவா, அனைவருக்கும் பணி வேண்டும்
    எனவே பொறுமையுடன் காத்திருங்கள் அரசு தெளிவாக முடிவு எடுக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. Irregular B. Ed Mudithu teaching experience ilaamal Celia ketpathu nayama

      Delete
  4. வாய்ப்பில்லை...

    ReplyDelete
  5. கடின டெட் தேர்வு எழதி பாஸ் செய்தவர்கள் 10 ஆண்டாக வேலை இலாமல் உள்ளனர்
    டெட் பாஸ் வேண்டும் வேலை பெறுவதற்கு.

    ReplyDelete
  6. உங்களின் காத்திருப்பு வலி மிகுந்ததுதான் ஆனால் தகுதி தேர்வு என்று அறிவித்த பின்னர் முழு கவனத்தையும் செலுத்தி Tet pass செய்திருந்தால் கூடுதல் சிறப்பு.10 வருட காலம் போராடி இருக்கலாமே தற்போது நியாயம் கேட்க வருவது ????? கடின உழைப்பால் தகுதி தேர்வில் பாஸ் செய்தவர்களும் தற்போது சீனியர்தான்

    ReplyDelete
  7. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று இன்று பலர் தனியார் பள்ளிகளில் ஊதியமின்றி மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கின்றனர் பதிவு மூப்பு என்பதும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்றதும் பணி வழங்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல அனைவரையும் கலந்து அரசு எடுக்கும் முடிவு என்பது புதிராகவே உள்ளது ...காத்திருப்போம் நியாயமான முறையில் பணிநியமனம் நடைபெறும் என்று

    ReplyDelete
    Replies
    1. Ungaluku munnaal B. Ed entrance pass Panni B. Ed padithavargal thiramai Illamal. B.Ed
      entrance panninom

      Delete
  8. Tamilnadu employment seniority association - State Coordinator, Thru. Chinnarasu Tanjore District. If any one of them have his contact number please share.

    ReplyDelete
  9. மத்திய அரசுப்படி அரசுப்பள்ளிகளில் தனியார் பள்ளிகளில் பணிப்புரிய TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் .சீனியார் டி என்பது அந்த காலம். இது TET NEET NET SLEET. காலம் கூடிய விரைவில் TET அறிவிப்பு வரும் கவலைப்படமல் தேர்வுக்கு தயராகுங்கள் நண்பர்களே || ஏனென்றால் ஒரு முறை TET தேர்ச்சி பெற்றால் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் நன்றி நண்பர்களே .இது பிடித்தால் Lik pannug

    ReplyDelete
  10. Friends!

    New Syllabus book
    6 to 10 Grammar Part PDF

    Send the link here if you have!
    Thank you!

    ReplyDelete
  11. 2010-ல் இருந்து காத்துக்கொண்டு இருக்கும் ஆசிரியர் நண்பர்களின் நிலைதான் என்ன அவர்களின் வாழ்வாதாரம் தான் என்ன இதற்கெல்லாம் மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பில் தான் பதில் உள்ளது அந்த பதிலை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம் எல்லோரும் பயனடைய வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. I am dted finished 2001. I attend the certificate verification 2004,2009,2010,2011.but no posting.Now I pass the tet paper_1 2013,2017
      So teacher posting tet pass+seniority wanted.

      Delete
  12. Tet pass with seniority இது தான் சரியான முடிவு

    ReplyDelete
  13. Tet pass+சீனியாரிட்டி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி