2020ல் அதிகம் இந்தியாவில் படிக்க குவியும் வெளிநாட்டு மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 20, 2021

2020ல் அதிகம் இந்தியாவில் படிக்க குவியும் வெளிநாட்டு மாணவர்கள்

 இந்தியாவில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து மருத்துவம் உள்ளிட்ட  பல்வேறு படிப்புக்களுக்காக வெளிநாடு செல்வதற்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் படிப்பதற்கு வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு வரை 164 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இந்தியாவுக்கு படிக்க வந்தனர். 2019-2020ம் கல்வியாண்டில், கொரோனா அச்சுறுத்தல் இருந்த போதிலும் 168 நாடுகளை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப துறையே இதற்கு பிரதான காரணமாகும். பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவில் பொறியியல் படிப்பதற்கு வருகின்றனர். குறிப்பாக, பிடெக் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  


கடந்தாண்டு இந்தியாவில் படித்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 427 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு இந்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 348 ஆக உயர்ந்துள்ளது. பிடெக் பிரிவில் மட்டுமே 9,503 பேர் சேர்ந்துள்ளனர். பிஎஸ்சி.யில் 3,964 பேர், பிபிஏ.வில் 3,290 பேர் சேர்ந்துள்ளனர். இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினரின் அடுத்த விருப்பமாக பிஇ உள்ளது. இதற்கு 2,596 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிபார்மா 2,451, பிஏ 2,295, பிசிஏ.வுக்கு 1,820 மாணவர்கள் வந்துள்ளனர். 2019-2020ம் ஆண்டில் 1,779 வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர்ந்துள்ளனர். பிஎஸ்சி.யில் 1,109, பல் மருத்துவத்தில் 651 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

மருத்துவ படிப்புகளில் மாணவிகள் அதிகம்

இந்தியாவில் மருத்துவ பிரிவுகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், மாணவிகளே அதிகம் இருக்கின்றனர். எம்பிபிஎஸ்.சில் 58.9 சதவீதம், பிஎஸ்சி நர்சிங் படிப்பில் 92.2%, பல் மருத்துவத்தில் 61.9 சதவீதம் மாணவிகள் உள்ளனர். அதே நேரம், பிஎச்டி.யில் 78.2%, எம்பிஏ 68.4%, எம்ஏ.வில் 60.2 சதவீதம் என மாணவிகளை விட மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். மேலும், எம்எஸ்சி.யில் 70.3 சதவீதமும், பிடெக்.கில் 83.8 சதவீதமும் மாணவர்கள் உள்ளனர்.

1 comment:

  1. கொரோனா பாஸ் ஆகறதுக்கு தானே??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி