பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி தலைவர்களிடம் நாளை ஆலோசனை - kalviseithi

Jun 4, 2021

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி தலைவர்களிடம் நாளை ஆலோசனை

கொரோனா நோய்த்தொற்று 2-வது அலை வேகமாக பரவியதன் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. 


இதை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். 


தமிழ்நாட்டில் பிளஸ் -2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது இன்னும் முடிவாகவில்லை. 


இந்த நிலையில் இன்று நடந்த ஆலோசனைக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 


அனைத்து தரப்பினருடமும்  நாளை ஆலோசனை நடத்திய பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து  முடிவு தெரிவிக்கப்படும்.


பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முதமைச்சர் முக ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார். 


பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி தலைவர்களிடம் நாளை ஆலோசனை நடத்த முதமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


மருத்துவர்கள், மனநல நிபுணர்களுடனும் ஆலோசனை நடைபெற உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. 


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. I don't know whether this message reaches to our honorable chief Minister of Tamil Nadu,but I hope this needed to be reached to our respected chief minister.

    Sir we are under a stage of blind mind because of tension,stress and depression for once again focusing the studies.
    Some students may lost their parents through these virus and some don't have much facilities to concentrate on studies and All students needed to be safe for their future we hereby requesting you to cancel these exams not only for sake of cancellation to get relief of mind for all students and as a student .I have written this requisition please do the needful sir please.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி