அனைத்து ஆசிரியர்களும் வரும் ஜூன் 6- க்குள் கொரானா வைரஸ் தடுப்புக்கான தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் - CEO Proceeding! - kalviseithi

Jun 4, 2021

அனைத்து ஆசிரியர்களும் வரும் ஜூன் 6- க்குள் கொரானா வைரஸ் தடுப்புக்கான தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் - CEO Proceeding!

 

THIRUVALLUR CEO PROCEEDINGS 

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் , அலுவலர்கள் / அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் 20.06.2021 க்குள் கொரானா வைரஸ் தடுப்புக்காள தடுப்பூசி ( Vaccine ) கண்டிப்பாக போடப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு தடுப்பூசி ( Vaccine ) போடப்பட்டவர்களுக்கு அரசு அளிக்கும் சான்றிதழ் நகலை உரியவரிடமிருந்து பெற்று அந்தந்த ஒன்றியத்திற்குரிய அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் , போடாதவர்களுக்குரிய காரணத்தை ஆதாரத்துடன் பெற்று வைத்திருக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்தகவல் குறித்து மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை மேற்கொண்டு இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 19.06.2021 க்குள் இவ்வலுவலக மின்ளஞ்சலுக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி