தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2021

தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை.

 


தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ, ஐபி பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது. மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வராத வகையில் செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை பெற வலியுறுத்தி மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து கூட்டமைப்பினர் கூறும்போது, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டண முறைகேடு நடப்பதை தடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு, தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 2019 - 20ம் கல்வியாண்டில் குறைந்தபட்சம் எல்கேஜி வகுப்புக்கு ரூ.16,615, அதிகபட்சமாக பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.25,850 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டணப் பட்டியலை ஒவ்வொரு தனியார் பள்ளியின் அறிவிப்பு பலகையிலும், பெற்றோர் பார்க்கும்படி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.


ஆனால் தனியார் பள்ளிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிடாமல், அதிக கட்டணத்தை பெற்றோரிடம் வசூல் செய்கின்றனர். மேலும், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை கட்ட வற்புறுத்தி வருகின்றனர். கொரோனா தொற்று காலத்தில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் 75 சதவீதத்தை இரண்டு தவணையாக கட்டலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள், அரசு உத்தரவுகளையும், நீதிமன்ற உத்தரவையும் கடைபிடிப்பது இல்லை. எனவே, தனியார் பள்ளி களில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் பெற்றுக்கொள்ள பொள்ளாச்சி சார் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

1 comment:

  1. Athena kuraintha patcham...16615 appo evallavu venunalum vankekkalama...
    Primary ku how much?
    Middle ku how much?
    High schoool how much? Teliva sollunga...y u play double game?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி