B.Ed செமஸ்டர் தேர்வுகள் வரும் 25 -ல் தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2021

B.Ed செமஸ்டர் தேர்வுகள் வரும் 25 -ல் தொடக்கம்.

 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன், கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 


உயர்கல்வி துறை செயலகத்தில், பல்கலைகளின் துணைவேந்தர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கடந்த வாரம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், ஆன்லைன் வழி செமஸ்டர் தேர்வு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.


எனவே, 2021 ஜூனில் நடக்கும் செமஸ்டர் தேர்வுகள், வரும், 24ம் தேதி ஆன்லைன் வழியில் நடக்கும். இதில் பங்கேற்க உள்ள நடப்பு கல்வி ஆண்டு மாணவர்கள் மற்றும் அரியர் மாணவர்கள், கல்லுாரிகளில் வழிமுறைகளை தெரிவித்து, தேர்வு கட்டணம் செலுத்தவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஐயா வணக்கம், ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி கல்வித்துறையில் எந்த வேலை இருந்தாலும் தரலாம். எந்த வேலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். தயவு செய்து முயற்சி எடுக்கவும். அல்லது அனைத்து ஆசிரியர்களுக்கும் 10 அல்லது 15 ஆயிரம் சம்பளத்தில் பணியமர்த்தினால் கூட நன்கு வேலை செய்வார்கள். அல்லது அனைத்து துறைகளிலும் கொரோனா தடுப்பு பணியையும் மேற்கொள்ளவும் தயாராக இருக்கின்றோம். கொரோனா தடுப்பு பணியில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு ஆசிரியரை நியமிக்கலாம். அவர்களுக்கு தனியாக சுத்தம் சுகாதாரம் மாணவர்களிடத்தில் கற்று தர சொல்லலாம். அவர்களுக்கு வேளாண்மை பயிற்சி அளித்து வேளாண்மை ஆசிரியராக பணியமர்த்த லாம் அல்லது நூலக ஆசிரியராகவும் பணியமர்த்தலாம். இனிமேல் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதுபவர்களுக்கு 90 மேல் மதிப்பெண் எடுத்தால் வேலை என அறிவியுங்கள். அப்பொழுது தான் சரியான நடைமுறை இருக்கும்
    நன்றி கண்ணீருடன்
    Reply

    ReplyDelete
  2. சிறப்பு 👍👍👍

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி