பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2021

பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

 பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 


சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:  


தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.  9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


கரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். 


தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை.


தற்போதைய நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்தும் நிலை குறித்து யோசிக்கவில்லை. கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ் ஆப் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வரும் முறை தொடரும். 


ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 


10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் 'அனைவரும் தேர்ச்சி' என்று இருக்கும். மதிப்பெண்கள் இருக்காது. 


தனியார் பள்ளிகள் 75% மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். அந்த 75% கட்டணத்தை 30%, 45% என இரு தவணைகளாக  வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்குமேல் ஏதேனும் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுப்போம்


தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர் என்ற செய்தி அறிந்தோம். மிகவும் கடினமான சூழல் தான். இதுகுறித்தும் கலந்தாலோசித்து அவர்களுக்குத் தேவையான உதவி செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

12 comments:

  1. நீங்களும் அதே துக்ளக் வேலைதான் செய்யறிங்க...? தமிழகம் முழுவதும் ஒரே சீராக பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடைபெறாத பொழுது எதற்கு இந்த அவசரம். காலையில் பள்ளி திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் மாலையில் தற்போது பள்ளி திறப்பு இல்லை என உங்களது துக்ளக் வேலை...?

    ReplyDelete
  2. கல்வி மட்டும் உங்க பொண்டாட்டியா இருந்தா டைவர்ஸ் வாங்கி ஓடி இருக்கும்.

    ReplyDelete
  3. Korona alai 1,alai 2 entru 1*1/4 varudamaga thaniyar palli teachers patttri yosikkum arasu eppo mudivedukkum. Kan ketta pin surya namashkaram vendame!

    ReplyDelete
  4. பகுதி நேர ஆசிரியர்கள் நிலை?

    ReplyDelete
    Replies
    1. Exam எழு‌தி வேலைக்கு போங்க sir..... எங்களை போன்ற youngest govt வேலைக்கு படிகிறது வேஸ்ட் தானே sir

      Delete
    2. Part time teacher conform annuvanga don't worry adhuku first part time la irrudhu namba full time teacher a adhay salary ku one year poga veandum...part time velai parthutu nambala permanent panna mudiydhu .. ordinary Pvt teacher case poata namba matikuvom so govt school la full time adhay salary ku namba job parka veandum adhuku appuram devaiyana attendance kidiachudum adhuku appuram namba ketka veandum permanent pannuga nu..appo Pvt teacher namba medhu case poatalum no problem..namba permanent agidalam idhu onnu mattum tha idea..

      Delete
  5. Meendum Puli varuthu kathaiya iraiva itharku mudive illaiya

    ReplyDelete
  6. private school teacher lam teacher ellaya ....oru committee form panni engaluku salary fix pannamatingala...

    ReplyDelete
  7. யாரு எக்கேடு கெட்டால் என்ன... இதெல்லாம் ஒரு ஊரு இங்க வந்து சைக்கிள் தள்ளிட்டு இருக்கேன் பரதேசி பரதேசி..

    ReplyDelete
  8. Private schools teachers பிச்சை எடுத்தாலும் வரிகட்ட சொல்லும் அரசாங்கம் இங்கதான்

    ReplyDelete
  9. DMK aatchi vandha yadhachum nadakum nu ninacha but admk DMK kuuttani dha pola

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி