தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2021

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

 

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டது.


அதன்படியே நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டும் அதுவும் இரண்டு தவணைகளாக அந்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் அதன் நிலை ஆய்வு செய்யப்படுகிறது.

இந்த ஆய்வுக்கு பிறகு அந்த பள்ளிகளில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படும். பள்ளிகளில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டை எழும் பொழுது அதற்கான காவல்துறை வழக்கு செய்யப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாரும் தப்பிக்க முடியாது என முதல்வர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களா என ஆய்வு செய்யப்படுகிறது. பள்ளிகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்வர் ஊரடங்கு தொடர்பான முழுமையான தளர்வுகள் அளித்த பிறகு பள்ளிகள் தொடங்கலாம் என உத்தரவிட்டால் அதற்காக தயார் நிலையில் உள்ளோம். மேலும் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து நாளை முதல்வரிடம் கலந்து ஆலோசித்து பின் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Ok privatr school and college Teacher's sallary pathi koduka solunga please .

    ReplyDelete
    Replies
    1. Government kitta ketta neenga private la job ku poninga... Epadi poningalo athe pola poi principal or correspondent kitta kelunga.... Summa ethuku eduthalum government kittaye varathu....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி