ஆசிரியர் தேர்வு வாரியம் கலைப்பா? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2021

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைப்பா? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

 

ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள்  விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இதுதவிர, நீதிமன்றங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.


இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  (டிஎன்பிஎஸ்சி) மூலம் பணி நியமனங்களை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்கும் முயற்சியை அரசுகைவிட வேண்டும் என்று அதிமுகஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் உட்பட சிலர் வலியுறுத்தினர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைஅதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படுவதாகவும், அதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்க முடிவு செய்துள்ளதாகவும் வெளியான தகவல்கள் கற்பனையானவை. அத்தகைய திட்டங்கள் ஏதும்அரசிடம் இல்லை. அதற்கு மாறாக, இந்த துறையை சீரமைப்பதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

3 comments:

  1. Every year ethachum rumara kilappi viduvathey intha media Vida velai

    ReplyDelete
  2. பள்ளிகளில் சிறப்பாசிறியர்கள் நியமனத்தில் டி. டி. சி (விவசாயம்) படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்குமா?

    ReplyDelete
  3. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி