ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2021

ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான வேலைவாய்ப்பும் எளிதாகவும், விரைவாகவும் கிடைத்து வந்தது.


அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் தகுதித் தேர்வும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் மருத்துவத் துறை பணியாளர்களை தேர்வு செய்வதற்கென்று “மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியம்” இந்தியாவிலேயே முதல்முறையாக ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது. 

இதன்மூலம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் விரைவாக நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டமைப்பு இல்லை, பணியாளர்கள் இல்லை,நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் இல்லை, வெளிப்படைத்தன்மை இல்லை, நிதிச்சுமை ஆகியவற்றை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு அதனை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைப்பது என்பது காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதை காலதாமதமாக்கும் செயலாகும்.


இதனால் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதில் தொய்வு நிலை ஏற்படும்.ஏனெனில் லட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்கப்படும் போது, அங்கும் பணியாளர் பற்றாக்குறை, கட்டமைப்பின்மை போன்ற பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டது என்பதற்காக இது கலைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.


எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால், அவற்றை முற்றிலும் போக்கி வாரியம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

43 comments:

  1. Merge pannama apdiyea vittu 2012,2013 la illegal pass panni nenga potta postings maatiri poda soldringala Mr. Panni sir

    ReplyDelete
  2. Innaikku padicha talent candidates varathathukku reason unna maathiri kaalu nakki thaa k Mr panni

    ReplyDelete
  3. 7,8 வருசமா வேலை போடல.
    இப்போ வந்து தொய்வு நிலை ஏற்படும் nu சொன்னா எப்படி அய்யா...

    ReplyDelete
  4. உங்க அகாராதியில் தொய்வு நிலை ன என்னங்கையா??? 2014 லிருந்து ஒரு போஸ்டிங் கூட போடலா.. நீயெல்லாம் பேசர..

    ReplyDelete
  5. Ungala mathiriye posting podama engala ellam saga solringala

    ReplyDelete
  6. Ithna nal enna panninga trb a improvement pandrathuku,,,,unga job a thakka vachikirathukea ungaluku neram sariya irunthuchi

    ReplyDelete
  7. Tnpsc ku pona piraguvathu pending la irukura posting podatum

    ReplyDelete
  8. இந்த TRB மூலமா எவ்வளவு கொள்ளை அடுச்சிருப்பாரு அந்த நன்றுக் கடனுக்கு ஏதாவது செய்யனுமில்லையா? அது தான் குரல் கொடுக்கிறார்.

    ReplyDelete
  9. செங்கோட்டையன் sir kita சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் எத்தனை முறை கேட்டோம்,,,,,,இன்று வரை அதற்கு தீர்வு காணவில்லை,,,,,ஆசிரியர் தேர்வு வாரியம் என்று ஒன்று இருபது உங்களுக்கு நினைவு இருக்கிறதா?,,,,ஆசிரியர் ஒரு பள்ளியிலிருந்து இன்னோரு பள்ளிக்கு செல்லும் போது சரியாக செய்துவிட்டு மற்றோரு பள்ளிக்கு செல்கிறார்கள்,,,,மாணவருக்கு பாதிப்பு வர கூடாது என்று,,,,அதனால் தான் மே மாதத்தில் transfer நடக்கிறது,,,அதே போன்று உங்களுக்கும் மே மாதத்தில் election நடக்கிறது,,நீங்கள் என்ன செய்தீர்கள்? ,,ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருக்கின்ற pending எல்லாம் முடித்தீற்களா?அம்மா உயிருடன் இருக்கும் போது அறிவித்த சிறப்பாசிரியர்கள் தேர்வு,,,அந்த கட்டுகள் இன்று வரை முடிய வில்லை,இவ்வளவு நாள் முடிக்காமல் இருபதற்கு நீங்கள் தான் பொறுப்பு,,,ஒரு நாளாவது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சென்று பார்த்து இருப்பீர்களா ,,, இப்போ எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறிங்க,,,,tnpsc ku மாறினால் தான் சிறப்பாசிரியர்கள் தமிழ் இட ஒதுக்கீடு 20% ku தீர்ப்பு கிடைக்கும்

    ReplyDelete
  10. Yethu yeppadiyo manusan trb ya olungu paduthunga nu soraaru..Sariya paduthu

    ReplyDelete
  11. அன்பில் மகேஷ் கல்வி துறை அமைச்சர் அவர்களே ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருக்கின்ற pending ellam முடிக்க சொல்லுங்கள்

    ReplyDelete
  12. Tntet pass பத்தி இந்த பன்னிசெல்வம் இது வரைக்கும் வாய் திறந்திருப்பாரா. இப்போ என்ன மயிறு போல் பேசுறாரு

    ReplyDelete
  13. Tnpsc Ku pona syllabus change aakum...meeting poduvaanga..notipi notifi varum...padikanum ..eluthanum..onnum one year aakidum friends...

    ReplyDelete
  14. தாராளமாக ஒப்படையுஙகள் ... அதற்கு முன் கிடப்பில் போடப்பட்ட அல்லது பாதியில் நிறுத்திய பணிகளை முடித்து தகுதி உள்ள நபருக்கு வேலையை கொடுத்துவிட்டு பின்பு கலையுஙகள்

    ReplyDelete
  15. அன்பில் மகேஷ் கல்வி துறை அமைச்சர் அவர்களே ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருக்கின்ற pending ellam முடிக்க சொல்லுங்கள்

    ReplyDelete
  16. இவன் பெரிய. வெண்ணை குறைசொல்ல வந்துட்டான்

    ReplyDelete
  17. ஆசிரியர் தேர்வு வாரியத்தை சரி செய்ய வேண்டும்

    ReplyDelete
  18. பொகிக்கு சுத்தம் செய்ங்க,,,,trb office a,,,கிடப்பில் எத்தனை pending iruku nu parunga

    ReplyDelete
  19. Tet pass+ seniority potu all selected list velippadayaga nettla podanum. Cctv camera trb officiala vaikkanum.

    ReplyDelete
  20. Tet pass+ seniority potu all selected list velippadayaga nettla podanum. Cctv camera trb officiala vaikkanum.

    ReplyDelete
  21. போய் 5வருஷம் தர்ம யுத்தம்
    நடத்திட்டு வா ....
    அந்த அம்மா பாவம் உன்ன சும்மா விடாது....
    Eps எவ்ளோ தேவலாம் உன்ன விட....

    ReplyDelete
  22. Ungaluku vaaipu kedacha, ,,trb sentry parunga,,,,,,pg trb,,,,special teacher posting ellam epo sonnathuku neenga epo posting poturukanganu parunga

    ReplyDelete
  23. OPS+EPS இரண்டு பேரும் UPS ல இயங்கிட்டு இருக்கு அப்படினு media ல கமேண்ட் வந்தது,,,,,நான் நம்பவில்லை,,,,,நீங்கள் இரண்டு பேரும் அம்மாவிற்கு துரோகம் செய்ய மாட்டார் என்றும் நினைத்தேன்,,,,நான்கு வருடமாக selection list la name வந்த பிறகும் பணி நியமனம் செய்யாமல் இருந்தீர்கள்,,,,,,அப்போது நினைத்தேன் ,,,,எல்லாம் உங்களை பேசியது சரி என்று,,,,,,உங்களுக்கு சுயநலம் முக்கியமாக இருக்கிறது,,,,,காலம் பதில் சொல்லும்

    ReplyDelete
    Replies
    1. இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை,,,சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ,,,தாய் மொழியை தாமதம் செய்தவர்களுக்கு கடவுள் கூலி தரும்,,,,,

      Delete
  24. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் படித்தவர்கள் பாவம் உங்களை சும்மா விட கூடாது

    ReplyDelete
  25. உன்மை வெளியே தெரியாத வரை எல்லோரும் நல்லவர்கள் தான்,,,,,,இன்று எனக்கு நாளை உனக்கு,,,,,நல்லது கெட்டது எல்லாம் (வரும்போது தெரியும்)

    ReplyDelete
  26. 1200 நாள் பணியில் இருந்தீர்கள்,,,,தற்போது உள்ள முதலமைச்சர் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை,,,,,நீங்களே யோசித்து பாருங்கள்,,,,ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு இந்த பதவியில் புதிதாக அமர்ந்தாலும் பக்குவமாக பணியாற்றுகிறார், ,,நீங்கள் 1200 நாள் என்னா செய்தீர்கள்,,,,,ஆசிரியர் தேர்வு வாரியம் ஒன்று இருபது தெரிந்ததா?????தற்போது வந்த கல்வி துறை அமைச்சர் எப்படி பக்குவமாக பேசுகிறார்,,,,,நீங்கள் இருந்த போது விரைவில் விரைவில் என்று பல நாட்கள் ஓடிட்டு,,,,,சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று காலில் எல்லாம் விழுந்தோம் செங்கோட்டையன் sir kita,,,,அதற்கு நீங்கள் முதலிலே பட்டியலில் பெயர் வராமல் செய்திருக்கலாம்,,,,,,விரைவில் என்று மூன்று வருடமாக காத்திருந்து காலங்கள் போயிட்டு,,,,,,,நல்லா இருங்கள் 🙏🙏,,,,நாங்கள் dmk,,,admk,,,அப்படினு இல்லை,,,,,நியாயம் என்று உள்ளது,,,,,நியாயத்தை சொன்னேன்,,,,நீங்கள் மூன்று வருடத்திற்கு முன்னதாக பணி நியமனம் செய்திருந்தால் எங்களுக்கு நீங்கள் கடவுள் மாதிரி இருந்திருப்பீர்கள்,,,,தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் ஒரு use இல்லை

    ReplyDelete
  27. பன்னீர்செல்வம் ஐயா உங்களுக்கு ஒரு பழக்கம்,,,,பதவியில் இருக்கும் போது உங்களுடைய கருத்து தெரிவிக்காமல்,,,,பதவி விட்டு வந்த பிறகு கருத்து தெரிவிப்பது..............உங்கள் சூழ்நிலை என்னவொ இருக்கட்டும்,,,,,கருத்து தெரிவிக்கிறேன் என்று வேலை இல்லா ஆசிரியர்கள் தலையில் கல்லை தூக்கி போடாதீர்கள்,,,,,,,,,நல்லது செய்யுங்கள்,,,,,காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர்,,,பட்டதாரி ஆசிரியர், சிறப்பாசிரியர்கள் போன்ற இடங்களில் பணி நியமனம் செய்ய சொல்லுங்கள்,,,,

    ReplyDelete
  28. 2013 TET PASS candidateskku eppo velai poduvinga Mr sengottaiyan😡😡😡😡😡

    ReplyDelete
  29. What happened 2013 tet passed candidates Mr sengottaiyan

    ReplyDelete
  30. Thalapathykku Theriyum you keep silence

    ReplyDelete
  31. Nearly 10 years gone for 2013 batch..but now trb dismissed..what about our patient.. we waited to one day...is that day?...no they have to ans our waiting so long..we should not leave it and we've to insist them..pls those who know familiar the rulers pls go and ask questions for us...I beg you pls..go and ask them..

    ReplyDelete
  32. PG Trb syllabus change akuma?

    ReplyDelete
  33. Panniselvam sir ivvalavu nala eppude thalaya aaatinegalo appudeye iruga vaya thorakurathuku ungaluku ena thahuthi iruuku mr.pannirrrrrrrrrselvam

    ReplyDelete
  34. Ayya 10 years epdi mounama iruntheenga athe madhiri amaithiya irunga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி