அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அதிகப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2021

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அதிகப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு இடம்பெயரும் மாணவர்களின் நலனுக்காக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். திருச்சியை அடுத்த திருவெறும்பூர் உய்யக்கொண்டான் வாய்க்காலில் ரூ.6 கோடி மதிப்பில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பள்ளிக்கல்வி கட்டணம் தொடர்பாக புகார் அளிப்பதற்கு, ஏற்கனவே பாலியல் தொடர்பான புகார் அளிப்பதற்கு வழங்கப்பட்ட எண்ணிலேயே தொடர்பு கொள்ளலாம்.



அல்லது இ மெயில் ஐடி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாது பள்ளிகள் குறித்த வேறு ஏதாவது புகார்கள் இருந்தாலும் அந்த உதவி எண்ணிலேயே தொடர்பு கொள்ளலாம். வரக்கூடிய புகார்களை கவனத்தில் எடுத்துக்கொள்ள தனியாக ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புகார்களில் உண்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளியை பெற்றோர்கள் நாடி வருகிறார்கள்.

இதற்காக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன்படி ஆங்கில வழிக்கல்வியை அதிகப்படுத்த பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள், போதுமான ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அதேபோல் கொரோனா காலம் என்பதால் மாணவர்கள், பெற்றோர்கள கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு, அதற்கு தகுந்தார்போல் பள்ளிக்கல்வித்துறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



22 comments:

  1. Good decision and also close all matriculation schoos

    ReplyDelete
  2. Very good decision follow in all government schools

    ReplyDelete
  3. 2017 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு செப்டம்பர் மாதம் பணி நியமனம். இது நம்பகமான செய்தி தான் நண்பர்களே... Selection method 90%Tet mark+10% Employment seniority

    ReplyDelete
    Replies
    1. 2013 um Sethu thana poduvanga

      Delete
    2. 177 processla 2013 mudichthan 2017,2019 podappadumnu solirunthanga.year of passingla seniority parthu poda vaippullathu.

      Delete
    3. 2013 முதல் என்று தான் உள்ளதே தவிர 2013 கு முன்னுரிமை என்று அல்ல. முட்டாள்களா....

      Delete
    4. 2013 புரிந்து கொள்வது எப்படி உள்ளது தெரியுமா? "இன்று முதல் அப்பத்துக்கு சர்க்கரை இல்லை". தமிழையே புரிந்து கொள்ள முடியவில்லையே.நீங்கள் எல்லாம் பள்ளிக்கு சென்று எப்படி தான் பாடம் நடத்த போகிறீர்களோ!

      Delete
  4. Replies
    1. High mark with senior teacher can be select

      Delete
  5. ஒருபுறம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20%வேலை வாய்ப்பு
    இப்ப english medium கையில் எடுக்கரிங்க என்னதான் உங்கள் மொழி கொள்கை

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஐயா,,,,தனியார் பள்ளிகளில் மக்கள் சேர்பதற்கு காரணம் English தான்,,,அதை கொண்டு வந்தால் அரசு பள்ளிகளில் வளர்ச்சி அதிகம் இருக்கும்,,,ஆசிரியர் பணி நியமனம் அதிகம் இருக்கும்

      Delete
    2. உங்கள் நாகரீகமான பதிலுக்கு தலை வணங்குகிறேன் ஐயா

      Delete
  6. Govt (knows everything) decision is final.. Poi vera vela irunda parunga unga kobattha padippula kaattunga.

    ReplyDelete
  7. எந்த போஸ்டிங் போடபோராங்க பழைய ஆட்சி மாதிரிதான்

    ReplyDelete
  8. No posting idhey dha sengottayanum sonnaru ivaru yana pudhusa va solluraru 2013 2017 nu fight Vera ithula poyi velaya parunga

    ReplyDelete
  9. முதலில் வயதை 58 ஆக குறைக்க வேண்டும் பின்பு அதிக பணியிடம் உருவாகும்

    ReplyDelete
  10. முதலில் வயதை 58 ஆக குறைக்க வேண்டும் பின்பு அதிக பணியிடம் உருவாகும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி