நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு.... பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2021

நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு.... பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

 

தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம், நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மாணவர்களிடத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்படுகிறது.


இந்நிலையில், நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். கருத்துக்களை neetimpact2021@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 23ம் தேதிக்குள் அனுப்பும்படி கூறி உள்ளார். 


ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும், மாணவர்களின் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை என்றும் சூர்யா கூறி உள்ளார்.


இதையும் படியுங்கள்: நீட் தேர்வு பாதிப்பு குறித்து கருத்துகளை தெரிவிக்கலாம்


கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ள சூர்யா, இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

3 comments:

  1. சூரியாவுக்கு வேறவேல இருந்தா போய் பார்க்கட்டும் மாணவர்களின் கல்வியில் விளையாட வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. அவ‌ர் வேற‌ வேலைய‌ ம‌ட்டும் பார்த்திருந்தா ப‌ல நூறு ஏழை மாண‌வ‌ர்க‌ள் அவ‌ரின் அக‌ர‌ம் அற‌க்க‌ட்ட‌ளை மூல‌மாக க‌ல்வி கற்க‌ முடியாதுங்க‌...பார்த்துப் பேசுங்க‌...நீங்க‌ என்ன‌ கிழிச்சீங்க‌...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி