தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2021

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை வேதனை அளிப்பதாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி, என்ன உதவி செய்ய முடியுமோ அது அவர்களுக்குச் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பள்ளிகளில் ஆய்வு செய்யும்போது ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் பல்வேறு கருத்துகள், கோரிக்கைகள் வரப் பெறுகின்றன. இவை அனைத்தும் அறிக்கையாகத் தயார் செய்யப்பட்டு, முதல்வர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் அளிக்கப்படும். நிதிநிலைக்கேற்ப எதுவெல்லாம் சாத்தியப்படுமோ, அதுகுறித்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்.


தமிழ்நாட்டில் 5.50 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களது நிலை வேதனை அளிப்பதாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது தொடர்பாக முதல்வர் தலைமையிலான பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி என்ன உதவி செய்ய முடியுமோ அது அவர்களுக்குச் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள 120 கல்வி மாவட்டங்களிலும் தலா 4 அல்லது 5 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மழலையர் பள்ளிகளை அதிகமாகத் தொடங்குவது குறித்தும் ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி தெரிவித்தார்.

ஆய்வின்போது சட்டப்பேரவையின் ஸ்ரீரங்கம் தொகுதி உறுப்பினர் எம்.பழனியாண்டி உடனிருந்தார்.

11 comments:

  1. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எதற்காக அரசு உதவ வேண்டும்?... அப்படியே ஏதேனும் உதவினால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அரசு உதவ வேண்டும்.... இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.... வசூல் வேட்டை நடத்திய தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்களுடைய ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கட்டும்... அரசு ஏன் உதவ வேண்டும்?...

    ReplyDelete
    Replies
    1. சார் நீங்க என்ன பண்றீங்க

      Delete
    2. எங்க சார ஆள காணோம்

      Delete
    3. Enda pundai nee enna govt sambalam vankittu velai pokqmq sunni sappa nayeee

      Delete
    4. Thambi olungana word use pannunga police la complaint panna vendi varum ladies um inda msg a parpanga unnoda veetla inda word a use pannu saria nee oru potta Da

      Delete
  2. unknown sir அவர்கள் வழியும் வேதனையும் அவர்கள் குடும்ப கஷ்டமும் அவர்களுக்குத்தான் தெரியும் அனைவரின் வேதனையையும் போக்குவது அரசின் கடமை .

    ReplyDelete
  3. தங்களுக்கு தேவைப்படுவதை தாங்கள் கேட்கலாமே தவிர மற்றவர்கள் கொடுப்பதை கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  4. Private college staffs life save TN-Govt.

    ReplyDelete
  5. சொன்னதே பெரிது.

    ReplyDelete
  6. SCL open panna veandum...
    Trb exam la Pvt SCL workpaniydhuku experience ku five or 10 marks experience ku thagudha mathiri panna veandum adhu podhu....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி