Flash News : தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கு வருகை புரிய ஆணையர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2021

Flash News : தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கு வருகை புரிய ஆணையர் உத்தரவு.

 

தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக 27 மாவட்ட ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கு வருகை புரிய உத்தரவு.

பார்வை 2 - ல் காணும் அரசாணையில் , 2020-21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் , மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10,11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர் அனைவரும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 


பார்வை 3 - ல் காணும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வாயிலாக அனைத்து வகைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணாக்கர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவும் , மேற்படி பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணாக்கர்கள் அனைவருக்கும் சார்ந்த தலைமை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இச்செயல்முறை ஆணைகளை அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் 6 முதல் 8 வகுப்புகளுக்கும் பின்பற்றி நடைமுறைப்படுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளாப்படுகிறார்கள்.


பார்வை ( 4 ) ல் காணும் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் உயர்கல்வி பயில்வதற்கான சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதாலும் , மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும் , மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும் , பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்களின் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து ஆசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பார்வை 5 - ல் காணும் தமிழக அரசின் செய்தி வெளியீட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான முழு ஊரடங்குகளில் கோயம்புத்தூர் , நீலகிரி , திருப்பூர் , ஈரோடு , சேலம் , கரூர் , நாமக்கல் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் , மற்ற 27 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே , கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப்பணிகளை அரசாணை ( 1 டி ) எண் .273 , வருவாய் ( ம ) பேரிடர் மேலாண்மை ( பே.மே .4 ) த்துறை , நாள் .13.08.2020 ல் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை ( SOP ) பின்பற்றி உடனடியாக மேற்கொள்ளவும் பிற 11 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறைவுக்குப் பின்னர் இப்பணிகளை மேற்கொள்ளவும் உரிய அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகைப் புரியவும் அவ்வாசிரியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை அந்தந்த ஆட்சிதலைவர்களிடம் கோரி நடைமுறைப்படுத்த வேண்டுமென அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் , 

கூடிய மாவட்ட பார்வை 6 - ல் கண்ட செயல்முறைகளின் படி 2021-22ஆம் கல்வியாண்டிற்கு 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன . 1 முதல் 12 வரை அனைத்து வகுப்புகளுக்கும் அதே வழிமுறைகளைப் பின்பற்றி மாணாக்கர் சேர்க்கையை நடத்த அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . 2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணாக்கர்களின் தேர்ச்சி விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முறைமை ( EMIS ) இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


எனவே , மாணாக்கர்களின் தேர்ச்சி விவரங்களை ( EMIS ) இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கு தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


அவர்கள் தேவையான போக்குவரத்து வசதிகளை நடைமுறைப்படுத்தவும் மற்றும் தேர்ச்சி விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கல்வி ஆணையாளரின் செயல்முறைகள்.






6 comments:

  1. Unmaiyava gopppaaal ....?!
    Nichayam pallikkoodam poye aganumaa gopppaaal....??

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் TRB fans முதல்வரின் 100 நாள் புகாரில் பதிவு செய்யுங்கள்.
      அரசினை எதிர்பார்க்காமல் தற்போதைய சூழலில் கிடைக்கும் வேலைக்கு செல்லுங்கள்.
      TRB FANS என்றால் நீங்கள் டான்னா,,!!! வெட்டிக்கதை பேசாமல் நடியுங்கள் கோபால்...

      Delete
  2. Hey Mental.. Unakku enna pirachanai

    ReplyDelete
    Replies
    1. Velaikke kilambu, thiyaga manappanmai konda teachers kilambi pala mani neram aguthu....

      Pulambittu irukkaama unknown_ngra pera mathitu dutyku kilambi...

      Delete
  3. Summave oosi sambalam vaangalaam nu paathaaa.. school vara solrangaleee...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி